பதிவு செய்த நாள் :
வக்காலத்து !
பாகிஸ்தானுக்கு ராகுலின் ஆலோசகர்...
பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம்

''ஒரு சில பேர் இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்துகின்றனர் என்பதற்காக, பாகிஸ்தான் என்ற நாட்டையே ஒட்டு மொத்த மாக குற்றம் சொல்வதை ஏற்க முடியாது,'' என, காங்., தலைவர் ராகுலின் ஆலோசகர், சாம் பிட்ரோடா கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் காலத்தில் நடந்த, தொலைத்தொடர்பு துறை புரட்சியின்போது, அவருக்கு மிகுந்த பக்க பலமாக இருந்தவர், சாம் பிட்ரோடா, 76. தொலைத் தொடர்பு துறையில், கொள்கை முடிவுகளை வடிவமைப்பதில், மத்திய அரசுக்கு ஆலோசகராக இருந்தவர்.


தொழில்நுட்ப வல்லுனரான இவர், தற்போது காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங் களுக்கான தலைவராக இருப்பதுடன், அக்கட்சி தலைவர் ராகுலுக்கு, மிகுந்த நெருக்கமான ஆலோசகராகவும், இருந்து வருகிறார். இந் நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதல், அதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து, இவர், டில்லியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


புல்வாமா தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து, பெரிய அளவில் தெரியாது. இருப்பினும், இதுபோன்ற தாக்குதல்கள், எல்லா காலகட்டங்களிலும் நடக்க கூடியவை தான். மும்பையில் கூட பயங்கரவாத தாக்கு தல் நடந்தது.அதற்கு பதிலடி தரும் வகையில், நாமும், உடனடியாக விமானங் களை அனுப்பி, கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, அது சரியான அணுகுமுறை இல்லை.


மற்ற நாடுகளையும், சர்வதேச அரசியலையும், இந்த அடிப்படையில் கையாளக்கூடாது. ஏதோ, ஏழு, எட்டு பேர் வந்து, ஏதாவது செய்துவிட்டு போகின்றனர் என்பதற்காக, அவர்கள் சார்ந்த நாட்டையே, ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல.சில பேர் வந்து தாக்குதல் நடத்து கின்றனர் என்றால், அந் நாட்டின் ஒவ்வொரு குடி மகன் மீதும்

கோபம் கொள்வது, நம் அறியாமையை தான் வெளிப்படுத்தும். இதுபோன்ற வழிமுறை களில், எனக்கு நம்பிக்கை இல்லை.


பாலகோட்டில், விமானப் படையினர் நடத்திய தாக்குதலில், 300 பேர் பலியானதாக கூறப்பட்டது. அது குறித்து ஒவ்வொரு இந்தியரும் அறிய விரும்பினர். ஆனால், சர்வதேச ஊடகங்களோ, அதுபோலயாரும் பலியாகவில்லை என கூறும் போது, ஒரு இந்தியனாக வருந்துகிறேன். மன்மோகன் சிங் அரசு வகுத்து கொடுத்த பாதையில் தான், நரேந்திர மோடி அரசும் பயணம் செய்கிறது. எதையும் புதிதாக செய்துவிடவில்லை.


ஆனாலும், மன்மோகன் சிங் அரசு போல, வேலை வாய்ப்புகளை, இந்த அரசு உருவாக்க வில்லை. நாடு முழுவதும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சமூக ஊடகங்களில், உண்மைக்கு மாறாக, நிறைய செய்திகள் உள்ளன. அவற்றின் உண்மை தன்மை குறித்து தெரிய வேண்டு மெனில், நிறைய ஆராய வேண்டும்.


தற்போது நடக்கும் லோக்சபா தேர்தல், காங்கிரசுக் கும், பா.ஜ., வுக்கும் இடையிலான தேர்தல் அல்ல. இந்தியாவின் எதிர்காலம் குறித்த தேர்தல். இந்தியாவின் ஆன்மா குறித்த தேர்தல் இது. அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தேர்தல் இது.


அவசியம்

இந்த தேர்தல், முற்றிலும் வேறானது. இதை பலர் உணராமல் உள்ளனர். வலுவான இந்தியாவை விட, ஜனநாயகமான இந்தியா தான் தேவை. ஹிட்லர் உள்ளிட்ட பல சர்வாதிகாரிகள், பலமான தலைவர் கள் தான்.ஆனால், இந்தியா ஜனநாயக நாடு. நிறைய பேசுவதும், ஆலோசிப்பதும் உரையாடுவதும், இங்கு அவசியம்.


வலுவான தலைவருக்கும், ஜனநாயக பண்புகள் உள்ள தலைவருக்குமான வேறுபாட்டின் அர்த் தத்தை புரியாமல், இந்தியர்கள் குழம்ப கூடாது. இவ்வாறு அவர் கூறினார். பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் வக்காலத்து வாங்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுலின்

Advertisement

ஆலோசகர் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பிரதமரின் பதிலடி

பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் கூறி உள்ளதாவது:காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை உரிய ஆலோசகர், வழிகாட்டி, பாகிஸ்தானின் தேசிய நாளை, காங்கிரஸ் சார்பில் கொண்டாட துவங்கியுள்ளார்.


அதற்காக, இந்திய ராணுவத்தின் செயல் பாட்டை, அர்த்தமில்லாமல் அவர் விமர்சிப்பது, வெட்கக்கேடு.காங்கிரஸ் கட்சியின் வாரிசுக்கு, பயங்கரவாதத்துக்கு பதில் அளிக்க விருப்பமில்லை.


ஆனால், இப்போது உள்ளது, புது இந்தியா; பயங்கரவாதிகளுக்கு, அவர்கள் மொழியில் தான், பதில் அளிக்கும்.காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், நம் ராணுவ வீரர்களை வார்த்தை களால், தொடர்ந்து புண்படுத்தி வருகின்றனர்.


காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை, 130 கோடி மக்களும் மன்னிக்க மாட்டார்கள். அவர்களின் இந்த பேச்சுக்களை யும், செயல்பாடுகளையும் மறக்க மாட்டார்கள். நம்முடைய வீரர்களுக்கு துணையாக, இந்தியர்கள் எப்போதும் நிற்பர். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மாணவனுக்கு ஏற்ற ஆசிரியர்


மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறிய தாவது:சாம் பிட்ரோடாவை, தன் ஆசிரியர் என, காங்., தலைவர் ராகுல் குறிப்பிட்டுள்ளார். நம் விமானப்படை செய்தது தவறு என, எந்த நாடும் கூறவில்லை. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூட கூறவில்லை. பாகிஸ் தானும், சாம் பிட்ரோடாவும் தான், இப்படி கூறுகின்றனர்.


பாக்.,குக்கு வக்காலத்து வாங்க, நம் நாட்டில் உள்ள சிலரில், தானும் ஒருவர் என, சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.ஆசிரியரே இப்படி என்றால், இவரது மாணவர் எப்படி இருப்பார்? ஆசிரியர் வழியில், மாணவரும், ராணுவத்தை விமர்சிக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Pad - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-மார்-201923:44:50 IST Report Abuse

Balaji Padஇவன் ஒரு டெக்னோகிரட் இல்லை. போலி ஆசாமி. நானும் அதே சிகாகோவில் தான் இருக்கிறேன். நாங்கள் இவனை எதற்கும் மதிப்பதே இல்லை. காந்தி குடும்பத்தோடு இந்தியாவை கொள்ளை அடித்த கொள்ளை காரன் இவன்.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
23-மார்-201919:47:41 IST Report Abuse

r.sundaramவந்து தாக்கியவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு பாரத ரத்னா கொடுத்து விடலாமா? இந்திய என்ற உணர்வு கொஞ்சமாவது இருக்க வேண்டாமா? என்றுமே தனி நபர் தர்மம் வேறு, அரச தர்மம் வேறு. நம்மை ஒருவன் தாக்கி விட்டால், காந்தி சொன்னமாதிரி மறு கன்னத்தை காட்டலாம். அனால் உலக அளவில் இப்படி இருந்தால் ஏமாளி என்று எள்ளி நகையாடுவார்கள். அதற்க்கு இஸ்ரேலின் பாணிதான் சரி. என்னை நீ ஒரு அடி அடித்தால் உனக்கு நாலு அடி விழும் என்று உலகுக்கு உணர்த்த வேண்டும். அதுவே வலிமையான இந்தியா. மும்பையில் நடந்த தாக்குதலுக்கு நாம் சரியான பதிலடி கொடுத்திருந்தால் இன்று நடந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதை காங்கிரஸ் அரசு செய்ய வில்லை. அதனால்தான் இந்த புல்வாமா தாக்குதல் நடந்தது. இனிமேலாவது நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
23-மார்-201918:51:54 IST Report Abuse

RajanRajanSAM, BE A GOOD TECHNOCRATE, DON'T SOWER MUD ON SELF LIKE MAN JI'S ENTERY INTO POLITICAL GLAMOURS. ITS A PLACE FOR DIRT WATER FOXES

Rate this:
மேலும் 61 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X