அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க.,வின் சாதனைகள்
சேலத்தில் ஸ்டாலின் கிண்டல்

சேலம்:''அ.தி.மு.க., அணி, கொள்ளையடிக்க, பேரம் நடத்த, அமைக்கப்பட்ட கூட்டணி,'' என, சேலத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

 அ.தி.மு.க.,வின் ,சாதனைகள்,சேலத்தில்,ஸ்டாலின்,கிண்டல்

சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில், தி.மு.க., வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து, ஸ்டாலின் பேசிய தாவது:

சேலத்தை, தி.மு.க., கோட்டையாக்கி தந்தவர்,

மறைந்த வீரபாண்டி ஆறுமுகம். தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, 1,553 கோடி ரூபாய் மதிப்பில், சேலத்தில், புதிய குளிர் உருட்டாலை, ரயில்வே மண்டலம், 120கோடி ரூபாய் மதிப்பில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என, எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றியது போல், அ.தி.மு.க, ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அறிவிக்க முடியுமா?

கோடநாடு கொலை, கொள்ளை; குட்கா மாமூல், அதில், அமைச்சர்கள், டி.ஜி.பி.,க்கு தொடர்பு என பல விவகாரங்கள். மொத்த ஒப்பந்தங்களும்பினாமிக்கு கொடுத்து கல்லா கட்டுவது, துாத்துக்குடியில், 13 பேரை சுட்டுக் கொன்றது,


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், ஆளுங்கட்சி தொடர்பை மூடி மறைத்தல்,தெர்மாகோல்

Advertisement

விஞ்ஞானம் கண்டுபிடித்தல் போன்றவை தான், அ.தி.மு.க.,வின் சாதனை கள். அ.தி.மு.க., அணி, கொள்ளையடிக்க, பேரம் நடத்த, அமைக்கப்பட்ட கூட்டணி. தற்போது, அவர்களுடன், பா.ம.க., பெரியய்யா வும் கூட்டு சேர்ந்து கொண்டார். பெரியய்யா வும், சின்ன அய்யாவும், மணியடிக்கும் பூசாரியாகி விட்டனர்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
23-மார்-201920:22:25 IST Report Abuse

Tamilselvanகல்லாப்பெட்டி நீங்கள் ஆட்டை போட்டதை சொல்ல நாள்,இல்லை வருடங்கள் போதாது. தமிழ் இன,இந்து இந துரோகிகளே ஓடி விடுங்கள். நீங்கள் இருக்க வேண்டிய இடம் திஹார்,

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
23-மார்-201919:45:42 IST Report Abuse

Tamilselvanசுடலை உங்கள் சாதனை சர்காரியாவில் தொடக்கி, ஸ்பெக்ட்ரம் கொள்ளை , நில அபகரிப்பு, ஸ்டெரிலைட்ஆலை கொண்டு வந்தது,மீத்தேன் திட்டம் அனுமதி கொடுத்தது,நீட் தேர்வுக்கு அனுமதி கொடுத்தது,சேது சமதுரத்திட்டத்தில் கொள்ளை அடித்தது,தாகிருஷ்ணன் கொலை,அண்ணாநகர் Ramesh கொலை,சாதிக் பாட்ஷா கொலை,உதயகுமார் கொலை, விவசாயிகளை ஒரு பைசா மின் கட்டணம் குறைக்க சொல்லியபோது துப்பாக்கி சூடு,இலங்கையில் லட்சக்கணக்கில் மக்கள் மடிந்த போது அட்டை போல பதவியில் ஒட்டி கொண்டு இருந்த தமிழின துரோகி சாதனை என இவர்களது சாதனை காலை அடுக்கி கொண்டே போகலாம். மீண்டும் பதவிக்கு வந்து கொள்ளை அடிக்க கொலை வெறியில் காத்து கொண்டு இருக்கும் இந்த கும்பலை,மத சார்பின்மை என்ற போர்வையில்,இந்து மதத்தினரை இழிவாக பேசி வரும் இந்த மோசடி கும்பலை இந்திய ஜனநாயகத்தை தவறாக பயன்படுத்த துடிக்கும் , தீய சக்திகளை விரட்டி அடிக்க ஒவ்வொரு தரும் தயாராக இருக்க வேண்டும். l

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
23-மார்-201916:29:48 IST Report Abuse

Baskarஅய்யா அவர்கள் கட்சியை அடமானம் வைத்து விட்டார்கள் என்று வாய் கிழிய பேசும் நீங்கள் சோனியாவிடம் எதை அடகு வைத்திர்கள். கடந்த பத்து ஆண்ண்டுகளாக அவர்களுக்கு அடிவருடியாக இருந்து கொண்டும் அவர்களின் காலை கழுவி கொண்டும் தானே இருக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாயில்லையா.

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X