அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி

புதுடில்லி:டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு தேர்தல் நன்கொடை வந்த வண்ணம் உள்ளது.

 பா.ஜ.,வுக்கு,குவியும்,தேர்தல்,நிதி

டில்லி தீனதயாள் உபாத்யாயா மார்க்கில் பா.ஜ., தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. சென்ற மாதம் முதல் இந்த அலுவலகத்திற்கு தேர்தல் நன்கொடை காசோலைகள்தினமும் குவிந்த வண்ணம் உள்ளன.சில காசோலைகள் அமித்ஷா பெயரிலும் சில மோடி பெயரிலும் வந்துள்ளன. கடந்த பிப்ரவரி, மார்ச் மாத்தில் மட்டும் ரூ.70 முதல் 80 கோடி வரை நன்கொடை வந்திருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.


என்ன காரணம்



திடீரென நன்கொடையின் அளவு

அதிகரித்த தன் காரணம் ஏன் என தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக மோடி பேசி வருவதன் விளைவா அல்லது பாலகோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதன் காரணமா அல்லது காங்கிரஸ் மீது மக்களுக்கு உள்ள கோபமா அல்லது மக்களின் பாதுகாவலன் என்று மோடிபேசி வருவ தாலா என்று பா.ஜ., அலுவலகத்தில் விவாதமே நடந்து வருகிறது.


இருப்பினும் இது தானாக மக்களிடம் ஏற்பட்ட ஆர்வத்தால் நடக்கிறது என்கிறார்கள் பா.ஜ., வினர். டில்லியில் 24 அக்பர் ரோட்டில் காங்., தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அவ்வளவாக நன்கொடைகள் வரவில்லை.


தேர்தல் கமிஷன் கணக்குப்படி 2017--18ல் காங்., கிற்கு ரூ.199 கோடி நன்கொடை வந்துள்ளது.
ஆனால் அதே ஆண்டு பா.ஜ.,வுக்கு ரூ.1,027 கோடி நன்கொடை வந்துள்ளது. கட்சிகளுக்கு நன்கொடை தருவதற்காக வெளியிடப்பட்டபத்திரங்களின் விற்பனையும் பா.ஜ.,வுக்கு தான் சாதகமாக இருக்கிறது.


மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ரூ.220 கோடிக்கான பத்திரத்தில் ரூ.210 கோடி அளவு பத்திரம் பா.ஜ.,வுக் காக வாங்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த

Advertisement

பத்திரத்தில் இது 94.5 சதவீதம். இது இரு கட்சி களுக்கும் இடையேயான வித்தி யாசத்தைத் தான் காட்டுகிறது. 2005-- 2006ல் ஆளுங்கட்சி யாக இருந்த காங்., கிற்கு பா.ஜ.,வை விட 3.25 மடங்கு அதிகமாக நன்கொடை கிடைத்தது. இது 2017 --18ல் காங்.,கை விட பா.ஜ.,வுக்கு 4.5 மடங்கு அதிக நிதி கிடைத்துள்ளது.


மற்ற கட்சிகள்நிலைமை என்ன




மார்க்சிஸ்ட், பகுஜன், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்., ஆகிய கட்சிகளுக்கும் நிதி கிடைத்துள்ளது. ஆனால் பா.ஜ., காங்.,கை ஒப்பிட்டால் தொகை மிகவும் குறைவு.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-201921:16:17 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்நியாயப்படி பார்த்தால் // பாகிஸ்தானுக்கு எதிராக மோடி பேசி வருவதன் விளைவாகவோ, அல்லது பாலகோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதன் காரணமாகவோ// இந்த பணம் அனுப்பப்பட்டிருந்தால், அது பிரதமர் நிவாரண நிதிக்கோ, அல்லது படை வீரர்கள் நிவாரண நிதிக்கோ தானே செல்ல வேண்டும். சோ(க்கிதா)ர் கும்பல் இப்போ ராணுவ வீரர்களிடமிருந்து கூட திருட ஆரம்பித்து விட்டீர்களா?

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மார்-201909:00:22 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பதில் சொல்ல வரக் காணோம் ...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-201921:12:30 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்//பாகிஸ்தானுக்கு எதிராக மோடி பேசி வருவதன் விளைவா அல்லது பாலகோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதன் காரணமா// - அதாவது பிரதமர் நிவாரண நிதிக்கு அணுப்பிள்ளை, சி.ஆர்.பி.எப் வீரர்கள் நிதிக்கு போகலை, ஆனா பாஜாகா கட்சிக்கு மக்கள் நிதி வழங்கிட்டாங்களா? இல்லை, அந்த நிதிக்கு போக வேண்டிய காசோலையை நீங்க திருடிட்டீங்களா? சோ(க்கித்தா)ர் கும்பல் ஏ.டி.எம் ஐ தூக்கிட்டு ஓடிட்டாங்க..

Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
23-மார்-201916:31:04 IST Report Abuse

Kumarநாட்டின் வளத்தை சுரண்டி தின்ன பிஜேபி என்று தான் போட வேண்டும். கொள்ளை அடித்து விட்டு என்று போட வேண்டும்.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X