பொது செய்தி

இந்தியா

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: 'பிட்ச் ரேட்டிங்ஸ்'

Updated : மார் 23, 2019 | Added : மார் 23, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி: 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வரும், 2020- - 21ம் நிதியாண்டில், 6.8 சதவீதமாக குறையும்' என, தர நிர்ணய நிறுவனமான, 'பிட்ச் ரேட்டிங்ஸ்' மறுமதிப்பீடு செய்து உள்ளது.


முந்தைய மதிப்பீட்டில், பொருளாதார வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சியை, 7.2லிருந்து, 6.9 சதவீதமாக குறைத்துள்ளது. அதேசமயம், மத்திய புள்ளியியல் துறை, 7 சதவீதம் என, மதிப்பிட்டு உள்ளது.
கடந்த, 2017 -18ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.2 சதவீதமாக இருந்தது.நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு காலாண்டுகளில் முறையே, 7 மற்றும் 8 சதவீதமாக இருந்த வளர்ச்சி, மூன்றாவது காலாண்டில், 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, தயாரிப்பு துறையின் மந்தநிலை, வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் சுலபமாக கடன் கிடைக்காத சூழல், அதன் தாக்கத்தால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள தொய்வு போன்றவற்றை கூறலாம்.
இந்தாண்டு, ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' வட்டியை, மேலும் குறைக்கும். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, டிசம்பரில், 72 ரூபாயாக குறையும் என, பிட்ச் ரேட்டிங்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ravichandran - vellore,இந்தியா
23-மார்-201914:00:16 IST Report Abuse
S.Ravichandran உழைக்காமல் பணம் வேண்டும், இலவசமாக உணவு வேண்டும், இலவசமாக வீடு வேண்டும், படிக்காமல் வேலை வேண்டும், போட்டியில்லாமல் வெற்றி வேண்டும், துட்டுக்கு வோட்டு, இலவசமே நம் தாரக மந்திரம், ஆனால் நாடு முன்னேற வேண்டும். இதற்க்கு ஏதாவது வழி சொல்லுங்கள். மோடிக்கு அறிவுரை கூறுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
23-மார்-201909:31:58 IST Report Abuse
tamil மோடி மட்டும் தான் இந்தியா வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறதுன்னு போகிற இடம் எல்லாம் பேசிகிட்டு இருக்காரு, ஆனால் வரும் செய்திகள் அவ்வளவு சாதகமாக இல்லை, பொருளாதாரத்தில் நாம் மிகப்பெரிய வளர்ச்சி அடைகிறோம் என்றால் ஜி.எஸ்.டி, வளர்ச்சி கணிசமாக உயரவேண்டும், வேலைவாய்ப்பு பெறுக வேண்டும், அவைகள் இல்லாத போது எப்படி இருக்கும் வளர்ச்சி
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
23-மார்-201909:19:33 IST Report Abuse
S.kausalya உங்களை மாதிரி தேச த்ரோகிகள் இருந்தால் 3019இல் கூட இந்தியா வல்லரசாக முடியாது. எல்லாவற்றிலும் மதம் சார்ந்த அரசியல். வக்கிரமான பதிவு. எங்கே மோடியை நல்லவர் என சொல்லி விடுவார்களோ என பயந்து அவரை கேவலப்படுத்தி கருத்து சொல்லி திருப்தி பட்டு கொள்ளுதல், பகைவன் உங்களை வென்று விட்டான் பாருங்கள் என கொக்கரித்தல், காவி கூட்டம், பயங்கரவாதிகள் என்று திரிபு கருத்து, இதை போன்ற தீராத நோயையை கூட வைத்து இருந்தால் எப்படி இந்தியா வல்லரசாகும். இந்தியா மோசமான நாடு என்றால் இங்கே ஏன் பிழைப்பு நடத்த வேண்டும்.? வளமான நாட்டுக்கு தன் இனத்தவர்களையும் சேர்த்து அழைத்து கொண்டு போக வேண்டியது தானே. இவர்கள் எப்போதுமே மரத்தின் மேல் அமர்ந்து கொண்டு மரத்தை வெட்டு பவர்கள். இந்தியாவின் தீராத குடைச்சல் வெளியே சீனா, பாகிஸ்தான். உள்ளே இவர்கள்.
Rate this:
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
23-மார்-201911:27:46 IST Report Abuse
Prabu.KTKசூப்பர் கௌசல்யா ஜெய் ஹிந்த்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X