அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார்?
முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி

ஆத்துார்:''தி.மு.க., கூட்டணியில், பிரதமர் வேட்பாளரை தேடித் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை,'' என, முதல்வர், இ.பி.எஸ்.,பேசினார்.

எதிரணியில்,பிரதமர்,வேட்பாளர்,யார்?,முதல்வர்,இ.பி.எஸ்., கேள்வி

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷ், சேலம், அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஆகியோரை ஆதரித்து, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

இந்த லோக்சபா தேர்தல், தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போட்டி. இதில், தர்மம் வெல்லும். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே மாதிரி ஆட்சி இருக்க

வேண்டும். இங்கு, அ.தி.மு.க., ஆட்சி செய்வதால், மத்தியில், பா.ஜ., ஆட்சி மீண்டும் அமைந்தால் தான், வளர்ச்சி பணிகளுக்கு, அதிக நிதி கிடைக்கும்.

மத்தியில், காங்., கட்சியும், தமிழகத்தில், தி.மு.க., வும்ஆட்சி செய்த போது, குண்டு மழை பொழிந்து, இலங்கையில் தமிழர்களை அழித்தனர். நம் இன மக்களை அழித்த அவர்களுக்கு, இத்தேர்தலில், தமிழக மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

மத்தியில் பலம் பொருந்திய, வலிமையான பிரதமர் தேவை; நம் கூட்டணியில், மோடி, மீண்டும் பிரதமராக வேண்டும் என பிரசாரம் செய்கிறோம். தி.மு.க., கூட்டணியில், பிரதமர் வேட்பாளரை தேடி, தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

தி.மு.க., தேர்தல் அறிக்கை, வெற்று அறிக்கை; மக்களை ஏமாற்றும் பொய் அறிக்கை. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும்.சில துரோகிகள், இந்த ஆட்சியை கவிழ்க்க, 18 எம்.எல்.ஏ.,க்களை இழுத்துச் சென்றனர். அவர்களால், 18 சட்டசபை தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. லோக்சபா, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்,

Advertisement

நம்மை எதிர்க்கும் சக்தி, எந்த கட்சிக்கும் இருக்காது.இவ்வாறு, அவர்பேசினார்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, கருமந்துறையில், வெற்றி விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், இந்த கோவிலில் வழி பட்டு, பிரசாரத்தை துவங்குவது, இ.பி.எஸ்., சின் வழக்கம்.

அந்த வகையில், நேற்று இங்கு வழிபாடு நடத்தினார். பின், அப்பகுதியில் உள்ள கடையில், முதல்வர், சுதீஷ் ஆகியோர் டீ குடித்து, பிரசாரம் துவங்கினர்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
24-மார்-201900:00:33 IST Report Abuse

RMEPS is not elected by people as CM b .BJP openely said the most corrupted state is TN under his rule.75 days they never saw amma and her death is mystery.Her vote bank is cleverly stolen to establish some one in TN.People cannot forget. They are not faithful to Amma how they faithful to people?

Rate this:
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
23-மார்-201914:36:01 IST Report Abuse

Ravi Chandranமக்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள். தமிழ் நாட்டில் ஒரே ஒரு எதிர் பார்ப்பு அவர்கள் தான். ஓட்டுக்கு காசு கொடுக்காத ஒரே கட்சி, சமூக சிந்தனைஓடு உள்ள ஒரே கட்சி, தமிழர்க்கு கிடைத்த பொக்கிசம் . சின்னம் இரடடை கரும்புடன் விவசாயி

Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
23-மார்-201917:24:13 IST Report Abuse

DSM .S/o PLM மிகவும் ஆபத்தான இயக்கம். ஆபத்தான தலைவன். முளையிலேயே கிள்ளி எரிய படவேண்டிய இயக்கம். நிறைய பேர் அந்த இயக்கத்தை பற்றிஉயர்வாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது மிஷனரிகளின் பணத்தில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மதவெறியாளனின் தனியார் நிறுவனம் போன்றது.. தோலை தூரத்தில் இருப்பதால் உண்மை புரியவில்லை என்று நினைக்கிறேன் ...

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
23-மார்-201913:34:10 IST Report Abuse

C.Elumalaiசனிக்கிழமை பிரதமர் விஞ்ஞான திருட்டு, தல வாரிசு இருக்கே.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X