பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு தனி செயற்கைகோள்

Added : மார் 23, 2019
Share
Advertisement
சென்னை, 'முதியோர் உதவித் தொகை, 2,000 ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும். வயது முதிர்ந்த, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, மாதம், 4,000 ரூபாய் வழங்கப்படும்' என, அ.ம.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அ.ம.மு.க., சார்பில், லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை இடைத்தேர்தலுக்கும், தனித்தனி தேர்தல் அறிக்கைகளை, நேற்று அக்கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரன் வெளியிட்டார். அதில்,

சென்னை, 'முதியோர் உதவித் தொகை, 2,000 ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும். வயது முதிர்ந்த, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, மாதம், 4,000 ரூபாய் வழங்கப்படும்' என, அ.ம.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அ.ம.மு.க., சார்பில், லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை இடைத்தேர்தலுக்கும், தனித்தனி தேர்தல் அறிக்கைகளை, நேற்று அக்கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரன் வெளியிட்டார். அதில், கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள்:* டெல்டா மற்றும் காவிரி படுகை மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்* ஜி.எஸ்.டி., வரி நடைமுறையை, கிராமத்தினரும் சிரமமின்றி பின்பற்ற, எளிய நடைமுறையை உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்* விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்* தென் மாநில நதிகளை இணைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்றுப்பாசனம், கிணற்று பாசனத்திற்கு வழி இல்லாத இடங்களில், விவசாயத்தை தொடர, இலவசமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்* தமிழகத்திற்கு என, தனி செயற்கைக்கோள், விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வுடன் இணைந்து, ஏவ நடவடிக்கை எடுக்கப்படும்* அனைத்து கல்லுாரிகளிலும், இலவச, 'வை பை' வசதி ஏற்படுத்தப்படும். கல்லுாரி மாணவர்கள் அனைவருக்கும், இலவசமாக, கையடக்க கணினி வழங்கப்படும். கிராமப்புற ஏழை பெண்கள், கல்லுாரி கல்வி கற்க, இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய், இரண்டு தவணைகளில் வழங்கப்படும்* முதியோர் உதவித்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 60 வயது முதிர்ந்த, ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, மாதம், 4,000 ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X