பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் ஐ.பி.எல்., கிரிக்கெட்; மின் வாரியத்திற்கு நெருக்கடி

Updated : மார் 23, 2019 | Added : மார் 23, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, இன்று(மார்ச் 23) முதல் துவங்குகிறது. ஆனால், நள்ளிரவு வரை மின் தேவை குறையாது என்பதால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், கோடைக்காலம் துவங்கியதால், தினசரி மின் தேவை, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி உள்ளது. இது, லோக்சபா தேர்தல், 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலால், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர் மின் தேவை

சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, இன்று(மார்ச் 23) முதல் துவங்குகிறது. ஆனால், நள்ளிரவு வரை மின் தேவை குறையாது என்பதால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.latest tamil newsதமிழகத்தில், கோடைக்காலம் துவங்கியதால், தினசரி மின் தேவை, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி உள்ளது. இது, லோக்சபா தேர்தல், 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலால், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர் மின் தேவை அதிகரிப்பால், மின் சாதனங்களில், 'ஓவர் லோடு' காரணமாக பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது.


latest tamil news


தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அனைத்து மாவட்டங்களிலும், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், எந்த இடத்திலும், மின் தடை ஏற்படக் கூடாது என்பதில், வாரிய அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், இன்று முதல், மே மாதம் வரை, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கிறது. தினமும், மாலை துவங்கி, நள்ளிரவு வரை இப்போட்டிகள் நடக்க உள்ளன. இதனால், மின் தேவை, வழக்கத்தை விட, கூடுதலாக, 500 - 700 மெகா வாட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. காலை, 6:00 மணி முதல் நள்ளிரவு வரை, மின் தேவை குறையாது என்பதால், அதை கவனித்து, அதற்கு ஏற்ப உற்பத்தி, கொள்முதல், சீராக வினியோகம் செய்ய வேண்டிய நெருக்கடி, மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvarajan Singaram - Cuddalore,இந்தியா
23-மார்-201912:58:18 IST Report Abuse
Selvarajan Singaram போட்டிகளின் மூலம் கோடிகளை குவிக்கிறவர்களையே மின்சாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய சொல்லி சட்டம் இயற்றனும் ..
Rate this:
Cancel
23-மார்-201912:50:52 IST Report Abuse
Chandran srinivasa kannaiya you proved that you are half. The total requirements includes those who are watching TVs up to 11.30 PM. thats all your knowledge
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
23-மார்-201910:20:13 IST Report Abuse
Loganathan Kuttuva சிறிய எல் ஈ டி தொலைக்காட்சி பெட்டிகள் மிக குறைவான மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X