பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் வெற்றியில் ஆர்வம்

Added : மார் 23, 2019
Share
Advertisement
இரண்டாவது முறையாக, காஞ்சிபுரம் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும், மரகதம் வெற்றி பெறும் பொறுப்பு, மாவட்ட செயலர், கணேசனிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் வெற்றி பெறாவிட்டால், கணேசன் பதவிக்கு ஆபத்து வரும் என, கட்சியினர் மத்தியில் கூறப்படுகிறது.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான அனைத்து பணிகளையும், தேர்தல் ஆணையம் ஒருபுறமும், அரசியல் கட்சியினர் ஒருபுறமும் செய்து

இரண்டாவது முறையாக, காஞ்சிபுரம் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும், மரகதம் வெற்றி பெறும் பொறுப்பு, மாவட்ட செயலர், கணேசனிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் வெற்றி பெறாவிட்டால், கணேசன் பதவிக்கு ஆபத்து வரும் என, கட்சியினர் மத்தியில் கூறப்படுகிறது.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான அனைத்து பணிகளையும், தேர்தல் ஆணையம் ஒருபுறமும், அரசியல் கட்சியினர் ஒருபுறமும் செய்து வருகின்றனர்.காஞ்சிபுரம் தொகுதிக்கு, அ.தி.மு.க., வேட்பாளராக, தற்போது எம்.பி.,யாக இருக்கும், மரகதம் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.கடந்த முறை இவர் வேட்பாளராக அறிவிக்கும்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.மேலும், பொதுமக்கள் பார்க்காத முகமாகவும் இருந்தது. இருப்பினும், ஜெயலலிதா பிரசாரம் செய்த காரணத்தாலும், அவர் மீதான நம்பிக்கையிலும், மரகதம் வெற்றி பெற்றார்.தொகுதியின் எந்த பகுதியில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றாலும், அங்கு பங்கேற்பதில் ஆர்வம், காட்டியவர், ஐந்தாண்டுகளில், தொகுதி மக்களை சந்திக்க அவர் காட்டியதில்லை என, தொகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற, அ.தி.மு.க.,வினர் சில வியூகங்களை கையாள முடிவு செய்து வருகின்றனர். ஆனால், அவை எடுபடுமா என, தெரியவில்லை.மரகதம் வெற்றி பெறும் பொறுப்பை, மேற்கு மாவட்ட செயலர்,கணேசனிடம் அ.தி.மு.க., தலைமை வழங்கியிருக்கிறது. அவர் வெற்றி பெறாவிட்டால், மாவட்ட செயலர், கணேசன் பதவிக்கு ஆபத்து வரும் எனவும் கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது
--- நமது நிருபர் --.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X