சென்னை: ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - தாம்பரம் இடையே, இன்று முதல் ஏப்., 5ம் தேதி வரை, குறிப்பிட்ட புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.l சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, இரவு, 8:28, 9:30, 11:05, 11:30, 11:59 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நிலையத்திற்கு, இரவு, 10:25, 10:45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனl சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு, இரவு, 8:15, 8:40, 11:20, 11:59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE