அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணம் எப்போ வரும்? பரிதவிப்பில் தே.மு.தி.க.,

Updated : மார் 23, 2019 | Added : மார் 23, 2019 | கருத்துகள் (31)
Advertisement

தேர்தல் செலவுக்கு, கட்சி தலைமை பணம் வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன், தே.மு.தி.க., வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய, நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது.


கள்ளக்குறிச்சியில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். விருதுநகரில், அழகர்சாமி; வட சென்னையில், மோகன்ராஜ்;திருச்சியில், டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடு கின்ற னர். இதில், சுதீஷை தவிர, மற்ற மூன்று வேட்பாளர்களும் வசதி குறைந்தவர்கள். தர்மபுரியில், ஏற்கனவே நடந்த நகராட்சி தலைவர், லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டதால், வேட்பாளர் இளங்கோவன், நிதி நெருக்கடியில் உள்ளார்.
வட சென்னை வேட்பாளர் மோகன்ராஜ், கடனில் சிக்கி தத்தளித்து வருகிறார். கட்சி தலைவர் விஜயகாந்தின் உத்தரவுக்கு கட்டுப் பட்டு, அழகர்சாமி, இந்த சுமையை ஏற்று உள்ளார். வட சென்னை, கள்ளக்குறிச்சியில், தி.மு.க.,வை எதிர்த்து, தே.மு.தி.க., போட்டி இடுகிறது. திருச்சி மற்றும் விருதுநகரில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, களம் காண்கிறது. தி.மு.க., - காங்., கட்சி களுக்கு இணையாக செலவு செய்ய, தே.மு.தி.க.,வின், மூன்று வேட்பாளர்களும் திணறி வருகின்றனர்.

அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், பூத் செலவு, தேர்தல் பணிமனை செலவு, பிரசார செலவு என, வேட்பாளர்களை கசக்கி பிழிய ஆரம்பித்துள்ளனர். எனவே, கட்சி தலைமை, எப்போது பணம் தரும் என எதிர்பார்த்து, மூன்று வேட்பாளர்களும் காத்திருக்கின்றன

-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-மார்-201916:46:12 IST Report Abuse
Malick Raja பாச்சா காண்பித்ததற்கெல்லாம் கிடைக்கும் வாய்ப்பை அதிமுக பயன்படுத்தாது ..பாடம் நடத்தும் . இனி இதோ அதோ இதோ .. என்ற பாட்டுப்போட்டு காண்பிப்பார்கள் .. தேமுதிக ,பாமக ,பாஜக மூன்று கட்சிகளும் டெபாசிட் பெருமளவுக்கு கூட வாக்குகள் கிடைக்க கூடாத வகையில் பாடுபட அதிமுக தங்களின் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது யாருக்குமே தெரியாதாம் மே 23.ல் தேர்தல் முடிவு சொன்னது போல் இருந்தால் மட்டுமே வட்டம் ஒன்றிய மாவட்டங்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்குமாம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-மார்-201916:16:57 IST Report Abuse
தமிழ்வேல் மூட்டை வந்துடும். உடம்பு சரி இல்லேன்னு ஆம்புலன்ஸை கூப்பிடுங்க கேப்டன் சார்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-மார்-201915:16:16 IST Report Abuse
இந்தியன் kumar திமுக பெரிய பெரிய தொழில் அதிபர்கள் களம் இறக்கி இருக்கிறது , சிறிய கட்சிகளின் பாடு அது கதி தான் , மக்கள் நல்லவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
23-மார்-201917:41:29 IST Report Abuse
Mirthika Sathiamoorthiநல்லவர்களை தேர்ந்தெடுக்கணும்ன்னு பொதுப்படையான கருத்து சொல்லி தப்பிக்க முடியாது. வெளிப்படையா இன்னாருன்னு பேரை சொல்லுங்க. 40 தொகுதி திமுக, அதிமுக, தினகரன் , கமல், சீமான். 5 கட்சி 200 வேட்பாளர்கள் ஒருத்தர் பேரையாவது சொல்லுங்க. பட்டுன்னு பானையை ஓடைக்க வேண்டியதுதானே? முடியதில்லா? யாருக்கு ஓட்டுபோடக்கூடாதுன்னு கேட்ட இன்னாருன்னு பேரை சொல்லி பட்டுன்னு பதில் சொல்ல முடியிற நம்மால....யாருக்கு ஒட்டு போடணும்ங்கிறப்பா மட்டும் பொதுபடையா நல்லவர்களுக்குன்னு சொல்றது ஏன்? நல்லவர்களுன்னு நெத்தியில் எழுதிவச்சுட்டு தேர்தலில் நிக்கிறாங்க? புரியலை.....புரியாத என்னைமாதிரி முட்டாள் வாக்காளர்க்கு புரியறமாதிரி பேர்சொல்ல ஏன் இவளவு கஷ்டம்...?...
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
26-மார்-201913:01:07 IST Report Abuse
இந்தியன் kumarஉங்கள் தொகுதியில் யார் நல்லவர்கள் என்பது உங்களுக்கு தான் தெரியும் எல்லா கட்சியிலும் சில நல்லவர்கள் பல கெட்டவர்கள் உள்ளனர் அது அந்தந்த தொகுதியில் உள்ள நல்லவர்களுக்கு தான் தெரியும் உதாரணமாக ph பாண்டியன் சொந்த செல்வாக்கில் தொடர்ந்து வென்றார் அதிமுக ஜானகி அணியில் வென்றவர் அவர் ஒருவர் தான் கன்யா குமரியில் பொன்னார், ஒட்டன் சத்திரம் சக்கர பாணி ராதாபுரம் அப்பாவு சுயேச்சியாக நின்று ஜெயித்தவர் ,கடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுகவில் 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றவர், ரவுடியாக இருந்தாலும் நல்லது செய்து பாராட்டு பெற்ற தாமரைக்கனி இப்படி அங்கங்கு ஒரு சிலர் இருக்கின்றனர் அவர்கள் யார் என்று பார்த்து வாக்களிக்க வேண்டும் யாரும் இல்லை என்று தெரிந்தால் நோட்டாவை தேர்ந்து எடுக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X