ஜெகன் மோகனுக்கு ரூ.375 கோடி சொத்து

Updated : மார் 23, 2019 | Added : மார் 23, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

அமராவதி : ஒய்.எஸ்.ஆர்., காங் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு ரூ.375 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் தனக்கு சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவென்டுலா சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜெயன்மோகன் ரெட்டி நேற்று தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவில் தனக்கு ரூ.339 கோடிக்கும் அதிகமான அசையும் சொத்துக்களும், ரூ.35 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news



2014 ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட போது ஜெகன் மோகன் தனது வேட்புமனுவில் தனக்கு ரூ.343 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தொழிலதிபரான இவரது மனைவி பாரதி ரெட்டியின் சொத்து மதிப்பும் ரூ.71 கோடியில் இருந்து ரூ.124 கோடியாக அதிகரித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டியின் 2 மகள்கள் பெயரில் ரூ.11 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



46 வயதாகும் ஜெகன்மோகன் மீது 31 கிரிமினல்கள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கும் அடக்கம். இருப்பினும் எந்த வழக்கிலும் தண்டனை பெறவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மார்-201908:12:06 IST Report Abuse
Srinivasan Kannaiya இது என்ன பெரிசா... இங்கே தமிழ்நாட்டில் ஒரே நாளில் சொல்ல முடியாத அளவில் ................. பார்க்கிறார்கள்
Rate this:
Cancel
23-மார்-201917:51:01 IST Report Abuse
அனைத்துமறிவோம் மிஷனரி சாரி மிஷினா உழைத்து சம்பாதித்தது.
Rate this:
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
23-மார்-201916:41:08 IST Report Abuse
தமிழ்மைந்தன் அவரு அப்பா முதலமைச்சராக இருந்து ரா பகலா தூக்கத்தை கெடுத்து உழைத்து சாம்பாதித்த சொத்துக்கள்.....முறைப்படி மகனுக்கு வந்துள்ளது......ஆனால் ரயிலில் டிக்கெட் எடுக்க காசே இல்லாத நிலையில் திருட்டுதனமாக வந்தவரின் குடும்ப கம்பெனி சொத்துக்களை கேட்டால் தலையே சுத்துதே........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X