சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!

Added : மார் 23, 2019
Advertisement
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!



கடந்த, 20 ஆண்டுகளாக, ஒடிசாவில் அசைக்க முடியாத கட்சியாக விளங்கி வரும், முதல்வர், நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம், சோதனை மேல் சோதனையை சந்தித்து வருகிறது. ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலையில், நவீன் பட்நாயக் கலக்கத்தில் உள்ளார்.
மொத்தம், 21 லோக்சபா தொகுதிகள் உள்ள ஒடிசாவில், ஏப்., 11, 18, 23, 29ல் நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இத்துடன், 147 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.கடந்த, 2000ல் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும், பிஜு ஜனதா தளம், முந்தைய தேர்தலை விட அதிக தொகுதிகளில் வென்று வந்துள்ளது.
கடந்த, 2014ல், 147 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில், 117ல் வென்றது. காங்., 16; பா.ஜ., 10ல் வென்றன.அப்போது நடந்த லோக்சபா தேர்தலில், 21 தொகுதிகளுள், 20ல் வென்று, பிஜு ஜனதா தளம் அசத்தியது; பா.ஜ., ஒரு இடத்தில் வென்றது.கடந்த, 2009 தேர்தலின் போது, பா.ஜ., உடனான கூட்டணியை முறித்து, பிஜு ஜனதா தளம், தனித்து போட்டியிட்டு, 103 சட்டசபை தொகுதிகளில் வென்றது. காங்., 27லும், பா.ஜ., ஆறிலும் வென்றன.
கடந்த, 2000 மற்றும் 2004ல் நடந்த தேர்தல்களில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 2000த்தில், பிஜு ஜனதா தளம், 68லும், பா.ஜ., 38லும் வென்றன.
கடந்த, 2004ல், இக்கட்சிகள் முறையே, 61 மற்றும் 32 தொகுதிகளில் வென்றன.தற்போது, ஐந்தாவது முறையாக, முதல்வராகும் உறுதியில், நவீன் பட்நாயக் உள்ளார்.
ஒரு பக்கம், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலிமை அடைந்து வருகின்றன.பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும்,
கட்சியில் இருந்து வெளியேறிஉள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர், பா.ஜ.,வில் இணைந்துஉள்ளனர்.குறிப்பாக, மிகவும் செல்வாக்குமிக்க, பாண்டா, பா.ஜ.,வுக்கு சென்றது, நவீனுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.
ஆட்சிக்கு எதிரான மன நிலையும், மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. இவ்வாறு, கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சோதனை மேல் சோதனையை சந்தித்து வருவதால், நவீன் பட்நாயக் கலக்கத்தில் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X