நேதாஜி பேரன் பா.ஜ., வேட்பாளர்

Added : மார் 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 நேதாஜி பேரன் பா.ஜ., வேட்பாளர்


மேற்கு வங்கத்தில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கிய மானவர், சுதந்திர போராட்ட வீரர், நேதாஜியின், சகோதரர் வழி பேரன், சந்திரகுமார் போஸ்.
இவர், தெற்கு கோல்கட்டா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இங்கு, திரிணமுல், காங்., வேட்பாளர், மாலா ராய், மார்க்சிஸ்ட் வேட்பாளர், நந்தினி முகர்ஜி போட்டியிடுகின்றனர்.
சமீபத்தில் கட்சியில் சேர்ந்துள்ள, முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரி, பாரதி கோஷ், மேற்கு மிட்னாபூர் மாவட்டம், கட்டல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியுடனான மோதலால் பிரபலமடைந்த இவருக்கு, இந்த தொகுதியில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம், வெற்றியை கொடுக்கும் என,
கருதப்படுகிறது.பா.ஜ., மாநில மகளிர் அமைப்பு தலைவியான, நடிகை, லாக்கெட் சாட்டர்ஜிக்கு, ஹூக்ளி தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இவர், பிர்பும் தொகுதி ஒதுக்குமாறு கேட்டிருந்தார். ஆனால், உளவு அமைப்பின் பரிந்துரைப்படி, அவர் வெல்ல வாய்ப்புள்ள, ஹூக்ளி தொகுதி தரப்பட்டுள்ளது.
வடக்கு கோல்கட்டாவில், பா.ஜ., மாநில முன்னாள் தலைவர், ராகுல் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த தேர்தலில், இதே தொகுதியில், திரிணமுல், காங்., சுதிப் பண்டோபாத்தியாயாவிடம் தோல்வி
கண்டவர். இம்முறையும், சுதிப் உடன் மோத உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-மார்-201906:32:20 IST Report Abuse
Bhaskaran அண்ணாதுரை குடும்பம் கே.ஆர். ராமசாமி குடும்பம் பாரதிதாசன் குடும்பம் இவர்களையெல்லாம் திமுக மறந்து ஆண்டுகள் பல ஆகிறது இவர்கள் இல்லையேல் திமுக இல்லை
Rate this:
Share this comment
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
24-மார்-201917:14:08 IST Report Abuse
K. V. Ramani Rockfortபாஸ்கரன், தவறாக சொல்கிறீர்கள், அண்ணாதுரை குடும்பம் கே.ஆர். ராமசாமி குடும்பம் பாரதிதாசன் குடும்பம் இவர்களையெல்லாம் திமுக மறந்து ஆண்டுகள் பல ஆனாலும், இன்னும் தி.மு.க. ஒரு நன்றிகெட்ட கட்சியாக வலம் வருகிறதே, அதற்கும் மானங்கெட்ட தொண்டர்கள் வோட்டு போடுகிறார்களே, ஏன் ? தேசப்பற்று உள்ள ஒவ்வொருவருமே நேதாஜியை நினைவில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், நேதாஜியை நீங்கள் குறிப்பிட்டவர்களுடன் ஒப்பிடாதீர்கள்....
Rate this:
Share this comment
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
24-மார்-201917:25:06 IST Report Abuse
K. V. Ramani Rockfortநேதாஜி பேரன், சந்திரகுமார் போஸ் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். நேதாஜி பேரன், சந்திரகுமார் போஸ் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். நேதாஜியை நம் இந்திய மக்கள் என்றுமே தங்கள் நினைவில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நேதாஜியை மறந்தவர் மனிதரே இல்லை.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X