அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கூட்டணிக்கு 'அட்வைசராக' மாறிய ராமதாஸ்!

Added : மார் 23, 2019 | கருத்துகள் (17)
Advertisement
   அ.தி.மு.க., கூட்டணிக்கு 'அட்வைசராக' மாறிய ராமதாஸ்!

தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து, தங்கள் கட்சிக்கு மட்டுமின்றி, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்களுக்கும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை வழங்கி வருகிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, அரசு நிர்வாகத்தை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், கடுமையாக விமர்சித்தனர்.
ஜெயலலிதா மறைவால், முதல்வரான, இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததோடு மட்டும் அல்லாமல், ஊழல் குற்றச்சாட்டுகளும் தெரிவித்தனர்.
இதனால், அ.தி.மு.க., - பா.ம.க.,வினர், எதிரும் புதிருமாக இருந்தனர். யாரும் எதிர்பாராத வகையில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்த, பா.ம.க.,வுக்கு, ஏழு லோக்சபா தொகுதிகளும்; ஒரு ராஜ்யசபா பதவியும் ஒதுக்கப்பட்டன.
அந்த அணியில், பாஜ., - தே.மு.தி.க., - புதிய தமிழகம், புதிய நீதி கட்சிகள் இடம் பெற்று உள்ளன.ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது, முந்தைய சட்டசபை, லோக்சபா தேர்தல்களில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன், பா.ம.க., கூட்டணி அமைத்தது; அவர்களுடன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்திய அனுபவம், ராமதாசுக்கு உள்ளது.
இதனால், தற்போதைய, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளால், ராமதாஸ், மூத்த தலைவராக கருதப்படுகிறார்.சமூக வலைதளங்களில், பா.ம.க., தலைவர்கள் விமர்சித்தது தொடர்பாக, 'மீம்ஸ்'கள் வந்தாலும், அதைப்பற்றி, அ.தி.மு.க., நிர்வாகிகள் கவலைப்படவில்லை. அதேசமயம், தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இதனால், விமர்சனங்களை முறியடிப்பது, தொண்டர்களை களப்பணி ஆற்ற வைப்பது, எந்த ஊரில், எந்த பிரச்னை பற்றி பேச வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக, பா.ம.க.,வுக்கு
மட்டுமின்றி, அ.தி.மு.க., - தே.மு.தி.க., என, கூட்டணி கட்சிகளுக்கும், ராமதாஸ் ஆலோசனை வழங்கி வருகிறார்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
28-மார்-201917:37:49 IST Report Abuse
Jaya Ram நல்லதுதானே வயதுக்கு மரியாதையை தரும் அதிமுகவினரை பாராட்டவேண்டும் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் எதிரணியினை பற்றி கவலைப்படாதீர்கள் அவர்களின் பொய்யும் புரட்டும் என்றும் வெற்றிபெற்றதில்லை எம்ஜிஆரின் தாரக மந்திரம் தர்மம் தனை சூது வெல்லும் ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும் இதை மனதில்வைத்து அனைவரும் செயல்படுங்கள்
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-மார்-201917:29:30 IST Report Abuse
J.V. Iyer பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்றமாதிரி செய்கிறார். இதில் என்ன தவறு. முதலில் வைக்கோவிடம் கேளுங்கள். வாழ்க ராமதாஸ்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
24-மார்-201917:07:35 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> 😂😂😂😂
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X