சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement
   'டவுட்' தனபாலு

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா: தமிழக, தேச நலனுக்காக, அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இணைந்துள்ளது. கூட்டணியில், பா.ஜ., இருந்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டால், தட்டி கேட்க, த.மா.கா., தயங்காது.


டவுட் தனபாலு: பா.ஜ., கூட்டணின்னு சொல்லவே தயங்குற நீங்க தான், தைரியமா தட்டிக் கேட்கப் போறீங்களாக்கும்... அதுசரி, சிறுபான்மையினருக்கு எதிராக, பா.ஜ., செயல்படும்கற, 'டவுட்' இருந்தால், எதற்கு கூட்டு சேர்றீங்க... உங்க சுயநலத்துக்கு, பா.ஜ., மீது எதற்கு சந்தேகச் சாயம்பூசுறீங்க...!

தி.மு.க., தலைவர்ஸ்டாலின்: மக்களுக்காக, எங்களுடன் மூன்றாண்டுகளாக போராட்டம், மறியல், வெளிநடப்பில் கலந்து கொண்டவர்களுடன், நாங்கள் அமைத்துள்ள கூட்டணி, கொள்கை கூட்டணி.


டவுட் தனபாலு: 'ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல், வெளிநடப்புகளில் தான், ஒற்றுமை... ஆக்கப்பூர்வமான விஷயங்களில், இவர்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருந்து பார்த்திருக்கிறீர்களா... அமளி துமளிக்காரர்களிடம், ஆட்சி, அதிகாரத்தை கொடுத்தால், நிர்வாகம் எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசியுங்கள்'னு, உங்க எதிர்க்கட்சிகள், 'டவுட்' எழுப்பிடப் போகுது...!


பத்திரிகை செய்தி: பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, அ.தி.மு.க., - எம்.பி., அன்வர் ராஜா தலைவராக உள்ள, வக்பு வாரிய அலுவலகத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

டவுட் தனபாலு: சும்மாவே, மத்திய அமைப்புகள் மூலம், அ.தி.மு.க.,வை, பா.ஜ., அடக்கி வைத்திருக்குன்னு, எதிர்க்கட்சிகள் நீட்டி முழக்கும்... தேர்தல் நேரத்தில், இதை மட்டும் விட்டிடுமா... 'மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருக்கும் அன்வர் ராஜா, பா.ஜ., குறித்து எதுவும் விமர்சிக்காமல் இருக்கவே, இந்த சோதனை'ன்னு, இதற்கும், கூடிய விரைவில், 'டவுட்'டை கிளப்பிடுவாங்க...!தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத்: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 1 கோடி பேருக்கு, சாலைப் பணியாளர் வேலை வழங்கப்படும் என, உறுதி அளித்துள்ளனர். தமிழகத்தின் நிதி நிலையை பற்றி, எதிர்க்கட்சி தலைவர், முழுமையாக அறியவில்லை எனத் தெரிகிறது.


டவுட் தனபாலு: கஜானாவை நாங்க காலி பண்ணி வைத்திருப்பது, ஸ்டாலினுக்கு எப்படித் தெரியாமப் போச்சுன்னு கேளுங்க... ஊழியர்களுக்கு கொடுக்க, பணத்துக்கு எங்கே போவீங்கன்னு கேட்பது நியாயமான கேள்வி தான்... ஆனா, உப்புச்சப்பற்ற ஏதாவது காரணங்களைச் சொல்லி, எல்லாருக்கும் ஏதாவது வகையில் இனாம் கொடுக்க மட்டும், பணம் எங்கிருந்து வருதாம் என்ற, 'டவுட்'டுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க...!


ஜெ., அண்ணன் மகள் தீபா: நாங்கள் தனித்து போட்டியிட்டால், அ.தி.மு.க., தொண்டர்கள் மனதில் வருத்தம் ஏற்படும். எனவே, தேர்தலில், அம்மா தீபா பேரவை, அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கிறது.


டவுட் தனபாலு: ஒன்றரைக்கோடி தொண்டர்களும், என் பக்கம்னு சொன்னது எல்லாம், 'கப்சா'ன்னு இப்பவாவது ஒத்துக்குறீங்களே... ஆமா, அ.தி.மு.க., தரப்பில் இருந்து, உங்க ஆதரவை யாருங்க கேட்டாங்க... 'உங்க தயவு ஒண்ணும், கட்சிக்கு தேவையில்லை'ன்னு, அவர்கள் சொல்லி விட்டால், என்ன செய்வீங்க... தேர்தலைக் கண்டு பயப்படுபவர்கள் எதற்கு, வீட்டுக்குள்ளேயே வீராப்புக்கு ரெண்டு கட்சிகளைத் துவக்கணும்கறது தான், மக்களின், 'டவுட்!'


பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா: தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை ஒரு, 'டிஷ்யூ' பேப்பர் தான்.

டவுட் தனபாலு: நீங்க, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையைப் பத்தி விமர்சிக்குறீங்க... உங்க கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியோ, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையும், குப்பைக்குத் தான் போகும்னு, அடித்துச் சொல்றாரே... இதைப்பத்தி ஏன் வாய் திறக்க மாட்டேங்குறீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-மார்-201907:51:30 IST Report Abuse
Bhaskaran இதே எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தேர்தலில் சரிசமமாக தொகுதிகளை பங்கிட்டு கொடுங்கள் என்றால் இவர்போட்டியிடும் இருபதுநாடாளுமன்றத்தொகுதிகளுக்கான 120 சட்டமன்றத்தொகுதிகளை போட்டியிடுவாரா அல்லது மனதில் மட்டும்தான் இடம் என்று சொல்வீர்களா
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-மார்-201907:49:15 IST Report Abuse
Bhaskaran அதிக ஆதரவாளர்களை கொண்டிருக்கும் தீப அம்மா யாருக்கு ஆதரவளிப்பாரோ என்று தமிழக மக்கள் பயந்துகொண்டிருந்த வேலையில் அதிமுகவுக்கு ஆதரவளித்து மக்களின் பயத்தை போக்கிவிட்டார் ஆனால் இந்த அம்மா எதிர்பார்பதுபோல் ஜெ சொத்து கிடைக்காது கொடுக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-மார்-201907:47:22 IST Report Abuse
Bhaskaran ஹ.ராஜா பேசக்கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X