பதிவு செய்த நாள் :
பணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி
காங்., தலைவர் ராகுல் தாக்கு

பாட்னா: ''பிரதமர் மோடி, பணக்காரர்களுக்கு தான் காவலாளியாக உள்ளார்,'' என, காங்., தலைவர் ராகுல், கடுமையாக தாக்கி பேசினார்.

பணக்காரர், காவலாளி,பிரதமர் மோடி , காங்.,, ராகுல், தாக்கு


பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான,ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புர்னியாவில் நடந்த,காங்.,தேர்தல் பிரசார கூட்டத்தில், ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி, தன்னை நாட்டின் காவலாளி என்கிறார்.


காவலாளிகளை யார் நியமித்திருப்பர்; சாதாரண மக்களின் வீடுகளின் வாயிலில்,

காவ லாளிகள் இருப்பரா...செல்வந்தர்கள் வீடுகளின் வாயிலில் தான், காவலாளிகள் நிற்பர். அதேபோல், பிரதமர் மோடியும், தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி போன்ற பணக்காரர்களுக்கு தான், காவலாளியாக செயல் படுகிறார்.அவர்களை, சகோதரர் என, அழைக்கும் பிரதமர், சாதாரண மக்களை, நண்பர்கள் என்கிறார்.


'ஏழைகளின் வங்கி கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்யப்படும்; இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்; விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும்' என, கடந்த லோக்சபா தேர்தலில், மோடி, வாக்குறுதிகளை அள்ளி வீசினார். இவற்றில் ஒரு வாக்குறுதியை கூட, அவர் நிறைவேற்றவில்லை.


விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் நலனுக்காக, அவர் எதுவுமே செய்யவில்லை.அதே நேரத்தில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஆட்சி அமைந் ததும், விவசாயி களின் கடன்களை, அம்மாநில, காங்., அரசுகள் ரத்து

Advertisement

செய்தன.இவ்வாறு அவர் பேசினார்.


பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், பொய் வாக்குறுதிகளை அளிப்பதி லும், சர்வாதிகாரத்தனமாக செயல்படுவதிலும், ஒரே மாதிரியாக உள்ளனர்.இவர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். மோடியும், மம்தாவும், எப்போது பேசினாலும், பொய்களை கூறுவர். வேறு எதையும் கூற மாட்டார்.

ராகுல், தலைவர், காங்கிரஸ்


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-மார்-201917:54:19 IST Report Abuse

Endrum Indianஇன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி உளறிக்கொட்டியே மக்களின் மனதை ஜெயித்து விடலாம் என்று மனப்பால் குடிப்பாயோ???

Rate this:
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-மார்-201916:24:45 IST Report Abuse

Sriram VBut you are chowkidaar for looters, corrupt people, cheaters, etc . We know how useless progressive alliance partners looted last தடவை We still didn't forget 2g, coal gate, spectrum, common wealth games, etc and tactics used to close the case

Rate this:
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
24-மார்-201916:00:38 IST Report Abuse

Balamurugan Balamuruganபப்புவதை ஓரமாக சென்று விளையாட சொல்லவும்

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X