அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முக்கிய  கட்சி, வி.ஐ.பி.,நேருக்கு நேர்,மோதல்

தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், 11 தொகுதிகளில், முக்கிய கட்சிகளின், வி.ஐ.பி., வேட்பாளர்கள், நேருக்கு நேர் மோதுகின்றனர்.
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 18ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி இடையே, நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. இது தவிர, அ.ம.மு.க., மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி போன்றவை, தனித்து போட்டியிடுகின்றன.

தனித்து போட்டி



மத்திய அமைச்சர், லோக்சபா துணை சபாநாயகர், முன்னாள் மத்திய அமைச்சர்கள், துணை முதல்வர் மகன் போட்டியிடும் தொகுதிகளான, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தர்மபுரி, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், நீலகிரி, அரக்கோணம், கரூர் ஆகிய லோக்சபா தொகுதிகள், வி.ஐ.பி., அந்தஸ்தை பெற்றுள்ளன.

கன்னியாகுமரி தொகுதியில், பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்; காங்கிரஸ் சார்பில், வசந்தகுமார் போட்டியிடுகின்றனர். இருவரும், 2014 லோக்சபா தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டனர்; பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதிக ஓட்டுகள் பெற்று, வசந்தகுமார் இரண்டாமிடம் பெற்றார்.அந்த தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகியவையும் தனித்து போட்டியிட்டன. இம்முறை, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வும், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசும் இணைந்துள்ளன. அதனால், போட்டி கடுமையாக இருக்கும் என,தெரிகிறது.



துாத்துக்குடி தொகுதி யில், கருணாநிதியின் மகள் கனிமொழி, முதன் முறையாக, லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பா.ஜ., சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை நிறுத்தப்பட்டு உள்ளார்.

பெண் பிரபலங்கள்


இருவரும், அரசியல் தலைவர்களின் வாரிசுகள்; பேச்சில் சளைத்தவர்கள் அல்ல. எனவே, போட்டி கடுமையாக உள்ளது. இரு பெண் பிரபலங்கள் மோதுவதால், இந்த தொகுதியும், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ராமநாதபுரம் தொகுதி, தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள, நவாஸ் கனியை எதிர்த்து, பா.ஜ., சார்பில், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார்.

இங்கு, பா.ஜ., - முஸ்லிம் லீக் இடையே, நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு அப்பாற் பட்டு, மத ரீதியாக

பிரசாரம் நடப்பதால், இந்த தொகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

தேனி தொகுதியில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வத்தின் மகன், ரவீந்திரநாத் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை வீழ்த்தும் நோக்கில், அ.ம.மு.க., சார்பில், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர், தங்கதமிழ்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில், முன்னாள் தலைவர் இளங்கோவன் களம் இறங்குகிறார். இதனால், இந்த தொகுதியும், வி.ஐ.பி., அந்தஸ்தை பெற்றுள்ளதுடன், போட்டியை கடுமையாக்கி உள்ளது.

முதன் முதலாக, தேர்தல் களத்தில் இறங்கியுள்ள மகனை, வெற்றி பெற வைத்தாக வேண்டிய கட்டாயத்தில், துணை முதல்வர் உள்ளார். எனவே, இங்கும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.தர்மபுரி தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சார்பில், அக்கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்புமணி; அ.ம.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன்; தி.மு.க., சார்பில், டாக்டர் செந்தில் ஆகியோர்

போட்டியிடுகின்றனர்.

கவுரவ பிரச்னை


அன்புமணி, ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி, வலுவான கூட்டணி இருப்பதால், மீண்டும் களம் இறங்கி உள்ளார். அன்புமணியின் வெற்றி, கட்சியின் கவுரவ பிரச்னை என்பதால், பா.ம.க.,வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.அரக்கோணம் தொகுதியில், தி.மு.க., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்; பா.ம.க., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர், ஏ.கே.மூர்த்தி மோதுகின்றனர். இருவருக்கும் தொகுதியில் செல்வாக்கு உள்ளது.

அறிவிக்கப்படவில்லை


ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; பணத்தை வாரி இறைக்கக் கூடியவர்கள். எனவே, தொகுதி மக்கள், எதிர்பார்ப்போடு உள்ளனர்.சிவகங்கை தொகுதியில், பா.ஜ., சார்பில், அக்கட்சி தேசிய செயலர், எச்.ராஜா நிற்கிறார். இவரை எதிர்த்து, தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர், இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கரூரில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை; மத்திய சென்னையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்; ஸ்ரீபெரும்புதுாரில், முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர்.பாலு; நீலகிரியில், முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா ஆகியோர் போட்டியிடுவதால், இந்தத் தொகுதிகளும், வி.ஐ.பி., அந்தஸ்தை பெற்றுள்ளன.இவர்களில், தம்பிதுரை தவிர, மற்ற அனைவரும், கடந்த தேர்தலில், தோல்வியை தழுவியவர்கள்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
24-மார்-201920:34:38 IST Report Abuse

தமிழ்மைந்தன் ஏன் பதட்டம்..

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
24-மார்-201918:07:12 IST Report Abuse

RajanRajanடபுள் ஜீ என்ன நாணல் பரம்பரையோ தூத்துகுடியிலே கொடி பிடிக்க??

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
24-மார்-201917:57:54 IST Report Abuse

RajanRajanஇன்னாது? டபுள் ஜீ VIP வேட்பாளரா? குப்பை அள்ளி தூர வீசுங்க

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X