அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

Added : மார் 24, 2019
Advertisement

நீலகிரி : லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ராஜா, தனது வெற்றிக்காக, கடந்த இரு முறை வாக்காளர்களுக்கு அதிகளவில் 'கவனிப்பு' வழங்கினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதில், பல கட்சி நிர்வாகிகள் சரியாக அதை சப்ளை செய்யாமல், 'சுருட்டி' விட்டதாக, தேர்தலுக்கு பின் தெரியவந்தது.கடந்த முறை அவரது தேர்தல் தோல்விக்கு பின், கட்சி நிர்வாகிகள் யாரும், தொகுதிப்பக்கம் சென்று மக்களின் குறைகளை கேட்கவோ, தீர்வு காணவோ இல்லை. கட்சியினரை கூட சென்று சந்திக்காததால், உடன்பிறப்புகள் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வேட்பாளர் ராஜா இந்த தேர்தலில் மாற்று முறையை கையாண்டுவருகிறார்.ஓட்டு வங்கி அதிகமுள்ளதாக கருதப்படும் கூடலுாரில் ராஜாவின் உறவினர்கள் பலர் முகாமிட்டுள்ளனர். இவர்கள் வாயிலாக தனியாக ஆட்களை நியமிக்கும் பணியை ரகசியமாக மேற்கொண்டுள்ளார். இது மட்டுமின்றி ஒவ்வொரு ஒன்றியம், நகரத்துக்கு தலா, 10 பேர் வீதம், தனது உறவினர்களை களமிறக்கி, அவர்கள் வாயிலாக பணம் பட்டுவாடா செய்யவும், தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளார்.தொகுதியின் தேர்தல் பணி மாவட்ட செயலாளர் வசம் ஒப்படைத்தாலும், அதிலும் கண்காணிப்பு உள்ளதாம். இதனால், இந்த தேர்தலில் ராஜாவிடம் இருந்து பணம் 'கறக்க' நினைத்த கட்சி நிர்வாகிகள் 'அப்செட்' ஆகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X