வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டி?

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ராகுல்,காங்கிரஸ், வயநாடு, கேரளா

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


அமேதியில் போட்டி


லோக்சபாவுக்கு ஏப் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி கேரளா காங். கட்சியினர் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல், உ.பி.,யின் அமேதி தொகுதியில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். பகுஜன்சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள், ராகுல், சோனியாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த போவதில்லை என அறிவித்துள்ளன.இந்நிலையில், ராகுல் கேரளாவின் வயநாட்டிலும் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


அதிகரிக்கும்


இது தொடர்பாக கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், ராகுல், கேரளாவில் போட்டியிட நிர்வாகிகள் விரும்புகின்றனர். கேரளாவில் வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும். இதனால் காங்.,கின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். என்றார்.

இதற்கிடையே வயநாடு தொகுதியில் இருந்து போட்டியிட ராகுல்ஒப்புக் கொண்டுள்ளதாக கேரள மாநில காங்.தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


வலியுறுத்தல்


முன்னதாக கர்நாடகா மூத்த காங்., தலைவர் சித்தராமையா, ராகுல் கர்நாடகாவில் ஏதாவது ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும் ராகுல், தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
24-மார்-201915:47:30 IST Report Abuse
kalyanasundaram he will lose in all places in this election.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மார்-201908:34:16 IST Report Abuse
Srinivasan Kannaiya போட்டி இடுங்கள்.. ஹரஹர சுதன் உதவுவான்
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
24-மார்-201904:17:11 IST Report Abuse
oce ஏம்பா அந்த ஆளை கூப்பிட்டுக்கினு கீறிங்க அவர் அமேதியை விட்டு நகர மாட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X