பெண்களுக்கு ராஜஸ்தானில், 'நோ!'

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ராஜஸ்தான், பெண்கள்,

ராஜஸ்தானில் சில ஆண்டுகளுக்கு முன், கவர்னர், முதல்வர் மற்றும் சபாநாயகர் என, ஒரே நேரத்தில் பெண்கள் அதிகாரத்தில் இருந்தனர். இது போன்று நாட்டின் எந்த மாநிலத்திலும் இருந்ததில்லை. ஆனால், சில ஆண்டுகளாக, லோக்சபாவில், ராஜஸ்தான் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை.

இந்த மாநிலத்தில், பெண் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க, வாக்காளர்கள் தயங்கியதே இல்லை. ஆனால், அரசியல் அரங்கில், ஆண்களின் ஆதிக்கம் தான் அதிகம். தேர்தலில் போட்டியிட கூட, பெண் வேட்பாளர்களுக்கு கட்சிகள் இடம் தர முன்வருவதில்லை.முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை, வாக்காளர்கள் மிகவும் விரும்பினர். இதனால், லோக்சபா மற்றும் சட்டசபை அரசியலில் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், சட்ட சபை மற்றும் லோக்சபா தேர்தலில், பெண் அரசியல்வாதிகளை ஏற்றுக் கொள்ள, ராஜஸ்தான் மக்கள் மிகவும் தயங்குகின்றனர்.இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.ராஜஸ்தானில், 1952ம் ஆண்டு நடந்த, முதல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நான்கு பெண்களை, வாக்காளர்கள் நிராகரித்தனர். கடந்த, 1952 முதல், 1967ம் ஆண்டு வரை, 10 பெண்கள் கூட சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை; இந்த எண்ணிக்கை, காலப் போக்கில் உயர்ந்தது.


ஆனால், 1985 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, 45 பெண்களில், 17 பேர் வெற்றி பெற்றனர்.லோக்சபா தேர்தலில், ராஜமாதா காயத்ரி தேவி, முதல் பெண் வேட்பாளராக, 1962 தேர்தலில், தன் வெற்றியை பதிவு செய்தார். சுதந்திரா கட்சி சார்பில், ஜெய்ப்பூர் லோக்சபா வேட்பாளராக அவர் போட்டியிட்டார்.இவர், 1962, 1967 மற்றும் 1971 என, தொடர்ந்து வெற்றி பெற்று, புதிய வரலாறை உருவாக்கினார்.

பல ஆண்டுகள் கழித்து இவரது மகள், சந்த்ரேஷ் குமாரி, 1989ம் ஆண்டு, காங்கிரஸ் சார்பில், ஜோத்பூரில் போட்டி யிட்டு, எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.ராஜ வம்சத்தை சேர்ந்த பல்வேறு பெண்கள், வெற்றியாளர்களாக இருந்துள்ளனர். யுவராணி மகேந்திர குமாரி, ஆல்வார் லோக்சபா தொகுதியில், 1991ம் ஆண்டு, பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பரத்பூர் ராஜ வம்சத்தை சேர்ந்த, கிருஷநேந்திர குமாரி தீபர், பா.ஜ., சார்பில், 1996ல் வெற்றி பெற்றார்.இதே போல, இந்துபாலா சுகதியா, நிர்மலா குமாரி ஷெகாவத் என, பலர் லோக்சபா தேர்தலில், பல முறை வெற்றி பெற்று உள்ளனர். இதே போன்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த பெண்கள், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

ஆனால், ராஜஸ்தானிலிருந்து, லோக்சபாவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை, பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை.இருந்தாலும், ராஜஸ்தான் வாக்காளர்களில், 50 சதவீதம் பேர், பெண் வாக்காளர்கள். அரசியல் கட்சிகள், பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதை விரும்புவதில்லை. இதுவே, லோக்சபாவில், ராஜஸ்தான் பெண், எம்.பி.,க்கள் குறைவாக இருப்பதற்கு காரணம்.சுமித்ரா சிங், ராஜஸ்தானின் முதல் பெண் சபாநாயகர். ஜுன் ஜுனு தொகுதியில், தொடர்ந்து ஒன்பது முறை வெற்றி பெற்றவர். ஆனால், இவரைப் போன்ற பெண்கள், மாநிலத்துக்குள்ளே, தங்களது அரசியலை சுருக்கிக் கொண்டனர்.

ஆனால், பொதுவாக, ராஜஸ்தான் பெண் அரசியல்வாதிகள், லோக்சபாவுக்கு செல்ல, அவர்களின் கண்களுக்கு தெரிந்தும், தெரியாமலும், பல தடைகள் உள்ளன. அவற்றை எதிர்த்துப் போராட வேண்டிய நிலை இருக்கிறது.மேலும், 73வது சட்ட திருத்தத்தினால், பஞ்சாயத்துகளில் வேலை செய்வதற்கான வாய்ப்பு, பெண்களுக்கு அதிகம் கிடைத்து உள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால், அரசியலில் இரண்டாவது ஆட்டம் ஆட, பெண்கள் நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லை.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானில், 25 இடங்களில், பா.ஜ., வெற்றி பெற்றது. ஆனால், அதில், சந்தோஷ் அஹ்லவத் என்ற, ஒரே ஒரு பெண், ஜுன் ஜுனுதொகுதியில் வெற்றி பெற்றார்.

- அபா சர்மா -
சிறப்பு செய்தியாளர்

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மார்-201907:56:46 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசியலை விட கரண்டி தான் நல்லது என்று நினைக்கிறார்களோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X