பொது செய்தி

இந்தியா

மளிகை கடை நடத்தும் பரீக்கர் சகோதரர்

Added : மார் 24, 2019 | கருத்துகள் (22)
Advertisement
மளிகை கடை நடத்தும் பரீக்கர் சகோதரர்

பனாஜி: மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் சகோதரர், கோவாவில் மளிகை கடை நடத்தி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவா முதல்வராக இருந்த மனோகர் பரீக்கர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். கோவாவின் 'மிஸ்டர் கிளீன்' என, அழைக்கப்பட்ட பரீக்கரின் எளிமையை பார்த்து, எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் அவரை விரும்பினர். பரீக்கருக்கு, அவ்துத் மற்றும் சுரேஷ் பரீக்கர் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மனோகர் பரீக்கரின் இளைய சகோதரர் சுரேஷ் பரீக்கர்(61) கோவாவின் வடக்கு கோவா பகுதியில்மபுசா மார்க்கெட் பகுதியில் கோபால்கிருஷ்ணா பரீக்கர் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையை பரீக்கரின் தந்தை துவக்கியதாகவும், தற்போது சுரேஷ் பரீக்கர் அதனை நடத்தி வருவதாக அப்பகுதியினர் கூறியுள்ளனர். மனோகர் பரீக்கர்,கோவா முதல்வர்,மத்திய பாதுகாப்பு அமைச்சர் என பல பதவிகள் வகித்திருந்தாலும், அவரது உறவினர்கள் அதனை பயன்படுத்தாமல், எளிமையாக வாழ்ந்து வருகின்றனர். சுரேஷ் பரீக்கர் மளிகை கடை நடத்தி வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
30-மார்-201904:24:31 IST Report Abuse
Vetri Vel ஒருத்தரின் மனைவியும் அப்படிதான் வாழ்கிறார்களாமே... சொந்த பந்தம் யாருமில்ல... சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.... யாரோட தலை எழுத்து...
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
31-மார்-201900:17:21 IST Report Abuse
Ram Sekarவெற்றி வேல், நீ ரொம்ப அறிவாளியா கேள்வி கேட்கறதா நினைக்காத?? சிறுவயசுல கல்யாணம் பண்ணின பிரச்சினை ஊருக்கே தெரியும். நீ சீனு போடாத. 3 பொண்டாட்டி வச்சிருக்கறவன், கோடிக்கணக்கில் குடும்பத்துக்கு சொத்து சேர்த்தவன் இவனுங்களுக்கு சோம்பு தூக்கற வேலைய கரெக்ட்டா பாரு போ போ....
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
30-மார்-201901:18:34 IST Report Abuse
தாமரை என்னய்யா அரசியல் நடத்துகிறீர்? எங்கள் தமிழகத்துக்கு வந்து பாருங்கள். கழக அரசியல்வாதிகள் எல்லோரும் நூறு தலைமுறைக்கு வசதியாக வாழ சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள். அவர்கள் முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்களா? அதெல்லாம் இப்போ எதுக்கு? இப்போ இருக்கும் சொத்து எவ்வளவு என்று மட்டும் பாருங்கள். பரீக்கரோ பிரீக்கரோ அவரோட சகோதரன் மாளிகைக்கு கடை. இந்த மோடி என்று சுத்தமா பொழைக்கத் தெரியாத அரசியல்வாதியோட உடன் பிறப்புக்கள் ஐயோ பார்க்கவே பரிதாபமாக இருக்கும். சீ சீ என்னய்யா அரசியல் வாதிகள் நீங்கள்? இவங்க நடத்துற கட்சி மீட்டிங்கு பார்க்கணுமின்னா நம்ம பாக்கட்டுல காசு வச்சுக்கணும். கேவலமா இல்லையா ஐயா? இதே எங்க ஊரு அரசியல்வாதி கூட்டத்துக்குப் போனா எந்தக் கட்சிக்கு காரனென்றல்லாம் பார்ப்பது கிடையாது மகாராசனுக தலைக்கு 500 ரூபா சிக்கன் பிரியாணி குறையாத அளவுக்கு பாட்டலுக அடேங்கப்பா?
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
29-மார்-201917:13:34 IST Report Abuse
I love Bharatham ....மோடி .RSS ..பர்க்கர்....எல்லாரும் கெட்டவங்க ...நீ ஒருத்தன் தாண் நல்லவன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X