கவலையில் சந்திரபாபு நாயுடு: என்.டி.ஆர்., படம் ஏற்படுத்துமா கலகம்

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (14)
Advertisement

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான, என்.டி.ஆர்., என்றுஅழைக்கப்படும், என்.டி. ராமாராவின் வாழ்க்கை தொடர்பான சினிமாவை வெளியிடுவதற்கு, ஆந்திரா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்த மாநிலத்தில், லோக்சபா தேர்தலோடு, சட்டசபை தேர்தலும் நடக்க உள்ள நிலையில், இந்த படம் வெளியாக உள்ளது, முதல்வர், சந்திர பாபு நாயுடுவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து, புகழ் பெற்றவர், ஆந்திராவைச் சேர்ந்த, மறைந்த நடிகர், என்.டி.ஆர்., குறிப்பாக, கிருஷ்ணன், ராமர் என, ஹிந்துக் கடவுள் வேடங்களில் அவர் நடித்த படங்கள், மாபெரும் வெற்றிகளைப் பெற்றன. அவரை, கடவுளாகவே, ஆந்திர மக்கள் போற்றினர்.சினிமாவில் உச்சத்தில் இருந்த அவர், தெலுங்கு தேசம் என்ற கட்சியைத் துவக்கினார். ஆந்திர அரசியலைப் புரட்டிப் போட்டு, அமோக வெற்றி பெற்று, முதல்வர் ஆனார்.கடந்த, 1995, ஆகஸ்ட் மாதத்தில், அவருடைய மருமகனான, தற்போது முதல்வராக உள்ள, சந்திரபாபு நாயுடு, அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து, கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து, என்.டி.ஆரை துாக்கி விட்டு, அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். இதனால் மனம் உடைந்த, என்.டி.ஆர்., 1996, ஜனவரியில் உயிர் இழந்தார். அவருடைய கடைசி காலத்தில், லட்சுமி பார்வதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார். அவரும், கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் விரட்டி அடிக்கப்பட்டார்.


தற்போது, ஆந்திராவில், 25 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்., 11ல் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன், 175 சட்டபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. என்.டி.ஆர்., மகனும், தெலுங்கு தேசம் கட்சி, எம்.எல்.ஏ.,வுமாக உள்ள, நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில், என்.டி.ஆர்., வாழ்க்கை வரலாறு தொடர்பாக, இரண்டு பாகங்கள் கொண்ட சினிமா, சமீபத்தில் வெளியானது. ஆனால், இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர், ராம் கோபால் வர்மா, என்.டி.ஆர்., குறித்து படம் எடுக்கப் போவதாக கூறியபோதே, சர்ச்சை வெடித்தது. ராம் கோபால் வர்மா, என்.டி.ஆர்., படம் எடுப்பதற்கு, தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.லட்சுமியின், என்.டி.ஆர்., என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளை, ராம் கோபால் வர்மா சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில் 'துரோகம் செய்துவிட்டனர், முதுகில் குத்திவிட்டனர்' என, என்.டி.ஆர்., கூறுவது போன்ற காட்சிகள் இருந்தன. அதையடுத்து, இந்தப் படத்தின் மீது, ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.தற்போது தேர்தல் நடக்க உள்ளதால், இந்தப் படத்தை வெளியிடுவதற்கு, தடை கோரி வழக்கு தொடரப்பட்டு இருந்தது. ஆனால், தடை விதிக்க, ஆந்திரா உயர் நீதிமன்றமும் மறுத்துவிட்டது.வரும், 28ல் படம் வெளியாக உள்ளது. இந்தப் படம், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்ள, மே, 23 வரை காத்திருக்க வேண்டியது இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-மார்-201915:02:06 IST Report Abuse
Pugazh V 6 மாதம் முன்னால், நதாகளை இணைத்த வல்லவர், ஏழைகளுக்கு நல்லவர்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-மார்-201914:59:01 IST Report Abuse
Pugazh V எழுதுங்கள் பார்ப்போம்??
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-மார்-201914:57:20 IST Report Abuse
Pugazh V .. எங்கே எழுதுங்க பார்க்க லாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X