பிரியங்காவுக்கு மவுசு கூடுது!

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (55)
Advertisement

புதுடில்லி: காங்கிரஸ் பொதுச் செயலாரக பிரியங்கா நியமிக்கப்பட்ட பின், கட்சிக்குள், அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.







ராகுல், காங்கிரசின் தலைவராவதற்கு முன், துணை தலைவராக இருந்தார். அப்போது, தன்னை சந்திக்க வரும் கட்சி தலைவர்களிடம், 'முதலில் ராகுலைச் சந்தித்து விஷயத்தை சொல்லுங்கள்; பின், என்னிடம் வாருங்கள்' என, கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார், சோனியா.'மகனுக்கு அனைத்து விபரங்களும் தெரிந்திருக்க வேண்டும். கட்சி நிர்வாகிகளுக்கு ராகுலின் முக்கியத்துவம் புரிய வேண்டும்' என்பதற்காகவே, இதை பின்பற்றினார், சோனியா.






பிரியங்கா விஷயத்திலும், தற்போது அது தான் நடக்கிறது. தன்னை சந்திக்கும், காங்., தலைவர்களிடம், 'பிரியங்காவை பார்த்து, முதலில் விஷயத்தை சொல்லுங்கள்' என்கிறார், ராகுல்.சமீபத்தில், ஒரு வேட்பாளர், 'என் தொகுதி, மேற்கு உ.பி.,யில் வருகிறது. ஆனால், பிரியங்கா, கிழக்கு மண்டலத்துக்கு தானே பொறுப்பாளராக இருக்கிறார்' என, ராகுலிடம் கேட்டுள்ளார்.கடுப்பான ராகுல், 'பிரியங்காவை பார்க்கச் சொன்னால், எதிர்கேள்வி கேட்கிறீர்களே' என, சீறியுள்ளார். அந்த வேட்பாளர், பெட்டி பாம்பாக அடங்கி, பிரியங்கா அறைக்கு நடையை கட்டினாராம்.'இந்த முறை, உ.பி.,யில், அதிகம் பிரசாரம் செய்வது இல்லை' என, முடிவு செய்துள்ளார், ராகுல்.






லோக்சபா தேர்தலுக்கு முன், காங்., தலைமையில், 'மெகா' கூட்டணி வைக்க முயற்சித்தார், அவர். ஆனால், பெரும்பாலான மாநிலங்களில், காங்கிரசுக்கு, மாநில கட்சிகள் கைவிரித்து விட்டன. இதனால், அரசியல் நிலவரங்களை சமாளிக்க முடியால், திணறி வருகிறார், ராகுல்.இதையடுத்து, கட்சியின் பெரும்பாலான பொறுப்புகளை, பிரியங்காவிடம் கொடுக்க, ராகுல் முடிவு செய்துள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
24-மார்-201920:51:46 IST Report Abuse
s t rajan அம்மா காங்கிரஸை பொட்டியில வச்சுட்டாங்க. பையன் ரா கூலு பெட்டியை மூடிட்டாரு. பொண்ணு புதைச்சுறும். காந்தி கனவு மே 23 இல் நனவாயிடும். இனிமே மே 23 இன்னொரு சுதந்திர தினம்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
24-மார்-201915:50:28 IST Report Abuse
vnatarajan ப்ரியங்காவின் தோற்றம் இந்திரா காந்தியை போல் உள்ளது. ஆகையால் மக்களை ஈர்க்கும் சக்தி அவரிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது. ஆனால் ராகுலிடம் ஒரு குழந்தைத்தனமான தோற்றமே உள்ளது. மக்கள் அவரை ஒரு குழந்தையை பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு செல்கிறார்கள் அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
24-மார்-201917:42:54 IST Report Abuse
sankarபப்பு தான் அழகு பப்பி யை விட அழகு . புருஷன் மூனுறு கோடி திருடன் இந்தம்மா ஊழலை ஒழிக்க வருது ....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-மார்-201915:21:39 IST Report Abuse
Natarajan Ramanathan Dear Sathiyanathan, I am MSc geography...... Even Italy listens ONLY what Vatican dictates.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X