தினமும் ஒரு அதிரடி!

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (92)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதனால், முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம், தங்களை பற்றிய செய்திகள், மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக, பல்வேறு வியூங்களை வகுத்து வருகின்றன.



இதில், பா.ஜ., தான் முன்னணியில் உள்ளது. 'தினமும், நம்மைப் பற்றிய செய்திகள் தான் அதிகம் வர வேண்டும். தினமும் செய்திகள் வந்தால் தான், நம் நினைவு மக்களுக்கு வரும்' என்பது, பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவின் அதிரடி திட்டம்.எதிர்க்கட்சி பிரபலங்கள், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். ஒரே நாளில், அனைவரையும் கட்சியில் சேர்க்காமல், தினமும் ஒருவரை சேர்த்தால், தினமும் செய்திகள் வருமே என, கணக்கு போட்டு, அதற்கேற்ப காய் நகர்த்தி வருகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.மற்றொரு பக்கம், புதிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகியபடி உள்ளன. நாடு முழுவதும் உள்ள, 25 லட்சம் காவலாளிகளிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பேசினார், மோடி; இது, அனைத்து மீடியாக்களிலும் நேரடியாக ஒளிபரப்பானது.தேர்தல் முடியும் வரை, இதுபோல், இன்னும் பல அறிவிப்புகள் வெளிவர உள்ளதாக, தகவல்கள் கசிகின்றன.



மற்றொரு முக்கியமான விஷயமும், பா.ஜ., தலைவர்களிடையே கிசுகிசுக்கப்படுகிறது. 'நம் விமானப்படை, பாகிஸ்தானுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில், எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; அதற்கான ஆதாரம் உள்ளதா' என, எதிர்க்கட்சிகள் கேட்டு வருகின்றனஅல்லவா; இதற்கான ஆதாரம், ஓட்டுப் பதிவு நாளுக்கு முன்னதாக வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



Advertisement




வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-மார்-201902:31:43 IST Report Abuse
தமிழ்வேல் தலைப்பு என்னவோ தினமும் ஒரு அதிரடி. ஆனால், தினமும் மோடிஜி பற்றி 10 அதிரடி செய்தி வெளியாகுதே..
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
24-மார்-201921:32:35 IST Report Abuse
balakrishnan பிஜேபி ஊழலற்ற கட்சி ,தேச பற்றுள்ள கட்சி.
Rate this:
Share this comment
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
30-மார்-201908:35:10 IST Report Abuse
K.   Shanmugasundararajபார தீய ஜனதா ஊழல் அற்ற கட்சி என்றால் 2014 க்கு முன்பு 250 கோடி சொத்து உடைய கட்சியாக இருந்தது 2014 க்கு பின்பு , இன்று ( 2019 ) ல் , 2500 கோடி சொத்து உடைய கட்சியாக மாறியது எப்படி ?.அதே போன்று கட்சிகளுக்கு கணக்கு மூலமாக வந்த நன்கொடை 493 கோடி மொத்த நன்கொடையில் பார தீய ஜனதாவுக்கு மட்டும் 450 கோடிக்கு மேல் அதாவது 93 %க்கு மேல் நன்கொடை வந்தது எப்படி?. 2014 க்கு முன்பு வராத நன்கொடை , ஆட்சிக்கு வந்த பின்னால் வருகின்றது என்றால் அதற்கு பெயர் என்ன ? ஊழல் தானே ....
Rate this:
Share this comment
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
24-மார்-201915:56:57 IST Report Abuse
Balamurugan Balamurugan இந்தியாவை உலக அளவில் தலைநிமிர வைக்க பாஜக கட்சியால் மட்டுமே முடியும்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-மார்-201912:38:24 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஆமா, அவனுங்க ஜெயிலுக்கு போனா தான், நம்ம ஜனநாயகம் வளரும், மானம் போகாமல் இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X