காங்., பெயரை நீக்க மம்தா மறுப்பு

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (20)
Advertisement

கோல்கட்டா : தனது கட்சியின் பெயரில் இருந்து காங்., என்ற பெயரை நீக்க மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.






லோக்சபா தேர்தலுக்கு ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் மம்தாவிடம், உங்கள் கட்சியின் பெயரான "அனைத்து இந்திய திரிணாமுல் காங்.," என்பதில் காங்கிரஸ் என்ற பெயரை உங்களின் கட்சி சின்னம், பேனர்கள் மற்றும் போஸ்டர்களில் இருந்து நீக்கிவிட்டு, வெறும் திரிணாமுல் என்று மட்டும் குறிப்பிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.





இதற்கு அக்கட்சி வெளியிட்டுள்ள பதிலில், தேர்தல் கமிஷனில் அனைத்து இந்திய திரிணாமுல் காங்., என்ற பெயரில் தான் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு 1998 ம் ஆண்டு ஜனவரி 1 அன்று தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்தது. அதனால் கட்சி பெயரில் இருந்து காங்., என்ற பெயரை நீக்க முடியாது என தெரிவித்துள்ளது. காங்.,ன் வழித்தோன்றலாக உருவாக்கப்பட்ட திரிணாமுல் காங்., மேற்குவங்கத்தில் இடதுசாரி ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து 12 வது லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
31-மார்-201909:29:17 IST Report Abuse
K.   Shanmugasundararaj
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
30-மார்-201909:12:50 IST Report Abuse
K.   Shanmugasundararaj
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
24-மார்-201920:59:20 IST Report Abuse
bal அப்பதான் காங்கிரஸ் நெனச்சு வோட்டு போடும் மக்கள் வாக்கை பெறலாம்...இல்லேன்னா பாதி வோட்டு கிடைக்கும்...இன்னொரு பக்கம் பிஜேபி தொந்தரவு கொடுக்கின்றது...இந்த பொம்பள சர்வாதிகாரி...இந்திராவின் தங்கை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X