அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை?

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (35)
Advertisement

சென்னை : வரும் லோக்சபா தேர்தலில் கமலின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை கமல் இன்று (மார்ச் 24) வெளியிட உள்ளார். இந்நிலையில் லோக்சபா தேர்தலில் கமல் போட்டியிட போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.





லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மையம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்த கமல், மார்ச் 20 அன்று தனது கட்சி சார்பில் தமிழகத்தில் 20 தொகுகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். தேர்தலில் தானும் போட்டியிட உள்ளதாக கமல் முன்பே கூறி இருந்ததால், இந்த பட்டியலில் அவரது பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் கோவையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மீதமுள்ள தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட உள்ளார்.




இந்நிலையில் கமல் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று வெளியிட உள்ள வேட்பாளர் பட்டியலில் வடசென்னை வேட்பாளராக ஸ்ரீபிரியா அறிவிக்கப்படலாம் எனவும், கவிஞர் சினேகன், துணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் வரும் லோக்சபா தேர்தலில் கமல் போட்டியிட மாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் லோக்சபா தேர்தலுடன் நடத்தப்பட உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் கமல் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் கமலை வலியுறுத்தி வருவதாகவும், சட்டசபை தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் கமல் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MATHIYALAGAN - Chennimalai,இந்தியா
24-மார்-201920:30:44 IST Report Abuse
MATHIYALAGAN கமல் கட்சி ஆரம்பித்தது தவறு. அதற்க்கு பதில் அவர் மட்டும் தனி ஒருவனாக சுயேட்சையாக போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று மந்திரி ஆகி ஆளும் கட்சியை கேள்வி கேட்கலாம் (வசூல் ராஜா mbbs போல் ). அதன் மூலம் மக்களின் நன் மதிப்பை பெற்று அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சி ஆரம்பித்து 243 தொகுதிகளிலும் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்.........
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
26-மார்-201911:25:30 IST Report Abuse
Sridhar243 தொகுதிகளிலுமா?...
Rate this:
Share this comment
Cancel
Thilakar N - Madurai,இந்தியா
24-மார்-201918:01:04 IST Report Abuse
Thilakar N பொறுத்துப்பாருங்கள் வெறுத்துவிடாதீர்கள் தனித்து நிற்கிறோம் தவிக்க விட்டுவிடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா
24-மார்-201917:17:32 IST Report Abuse
Siva Rama Krishnanan கமல் சீமான் இவர்கள் கட்சியில் இவர்களுக்கு அடுத்து யார் அவர்களுக்கே தெரியாது. பரப்புரை இவர்கள் தாம் செய்ய வேண்டும். இவர்கள் தேர்தலில் நின்றால் வைப்புத்தொகை திரும்ப கிடைக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X