அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள்

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (42)
Advertisement

சென்னை : நேற்று முன்தினம் (மார்ச் 22) வெளியிடப்பட்ட, லோக்சபா தேர்தலுக்கான தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் தங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று காங்., வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதும், சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் காட்டி வருவதும் பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


காங்., வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கார்த்தி சிதம்பரமும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால், தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே தேர்தல் பணிகளை துவக்கி இருந்தார். ஆனால் கட்சி தலைமையோ அப்பா - மகன் மீதான ஏர்செல் மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, அதற்காக 22 நாட்கள் கார்த்தி சிறை சென்றது, தற்போது இருவரும் முன்ஜாமின் கேட்டுள்ளது ஆகியவற்றை காரணம் காட்டி சீட் தர மறுத்துள்ளது.

கன்னியாகுமரி தொகுதிக்கு கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ.,வான வசந்தகுமார், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2014 ல் காங் தனித்து போட்டியிட்ட போது இவர் 2.44 லட்சம் ஓட்டுக்கள் பெற்றார். இது குறித்து காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், பார்லி.,யில் சிறுபான்மையினர் குரல் ஒலிக்காமல் போக உள்ளது துரதிஷ்டவசமானது. காங்.,க்கு சிறுபான்மையினரிடம் பாரம்பரிய ஓட்டுவங்கி உள்ளது. அவர்கள் இந்த முடிவால் மனமுடைந்துள்ளனர் என்றார்.


தேனி, திருச்சி நிலைமை என்ன ?


இதே போன்று தேனி தொகுதியில் 2 முறை எம்.பி.,யாக இருந்த ஆரூண் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் மாநில தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி ஆரூணுக்கு சீட் மறுக்கப்பட்டதுடன், இளைஞர் காங்., தலைவராக உள்ள ஆரூணின் மகன் ஹசன் மவுலானாவுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது தேனி தொகுதி காங்., வேட்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தொகுதியை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள இளங்கோவன், காங்., வேட்பாளரான திருநாவுக்கரசிற்கு கடும் நெருக்கடியை தருவார். திருச்சியில் மக்களிடம் ஆதரவுள்ள அடைக்கலராஜிற்கு சீட் தொகுதி வழங்கப்டாமல் புறக்கணிக்கப்பட்டதும் காங்., தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-மார்-201910:11:17 IST Report Abuse
Bhaskaran ஐயமாருன்களைப்பிடிக்காது ஆனால் மருமகன் பேரன் ஐயமார்வீட்டில்தான் பெண் எடுத்தாங்க
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
25-மார்-201906:36:32 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இவன் ஒன்னம் நம்பர் பிராடு என்று தெரிஞ்சும் அவனை நிறுத்தினால் தோல்வி நிஸ்ச்சயம் 100% அப்படியே வின் பண்ணாலும் அவன் அப்பா போலவேதான் கிட்டும் கண்ராவி மக்களே ப்ளீஸ் ஒருவன் பிராடுன்னு தெரிஞ்சால் வோட்டுப் போடாதீங்க அதனால் நீங்கள் செய்வது தேசத்துரோகம் தான்
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-மார்-201903:17:34 IST Report Abuse
Rpalnivelu அதிருப்தியில்லாத ஒரே கட்சி திருட்டு முன்னேற்ற கலகம் மட்டுமே. வேட்பாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் மெகா ஊழல் பெருச்சாளிகளான குடும்ப நபர்கள். மீதி விஞ்ஞான ஊழல் பெருச்சாளிகள் (உ.ம்) ஜெகத்ரட்சகன், டி .ஆர். பாலு போன்றோர். நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் வெறும் கைச்சூப்பிக் கொண்டிருக்க வெண்டியதுதான். கட்சி குண்டர்கள் பிரியாணிக் கடைகளை சூறையாடி வயிற்றை நிரப்பி கொள்ள வெண்டியதுதான். வட்டம்/மாவட்டம்/கவுன்சிலர் அப்பாவி மக்களின் சொத்துகளை சூறையாடி தின்ன வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X