பீகாரில் கண்ணையாவை கைவிட்ட கட்சிகள்

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (21)
Advertisement

பாட்னா: கடந்த 2016 ல் பரபரப்பாக பேசப்பட்ட டில்லி பல்கலை., மாணவ தலைவர் கண்ணையாகுமாரை பீகாரில் எதிர்கட்சிகள் கழற்றி விட்டு விட்டதால் தனி மரமாக நிற்கிறார். இதனால் அவரது வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.






டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., மாணவ தலைவனாக இருந்தவர் கண்ணையாகுமார். கல்லூரி வளாகத்தில் பயங்கரவாத ஆதரவு பேச்சு பேசியதால் இவர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. இடதுசாரி கட்சியை சேர்ந்த இவருக்கு ஆளும் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.


லாலு, காங்., கூட்டணி அறிவிப்பு






இந்நிலையில் நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் கண்ணையாகுமார் பீகார் மாநிலம் பெகுசாரை என்ற தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அனைத்து எதிர்கட்சிகளும் இதனை ஆதரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று பீகாரில் லாலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெகுசாரை தொகுதியில் இந்த கட்சியினர் போட்டியிடவுள்ளனர். இதனால் இந்திய கம்யூ., கட்சியினர் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பெகுசாரை தொகுதியில் கண்ணையாகுமார் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக கிரிராஜ்சிங் போட்டியிடுகிறார். கடந்தமுறை வெற்றியை இழந்த லாலுவின் ராஷ்ட்டிரிய ஜனதாதளம் கட்சி சார்பில் தன்வீர் ஹசனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இவர் மூலம் முஸ்லிம்கள் ஓட்டுக்களை கவர முடியும் என இக்கட்சி நம்புகிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
24-மார்-201920:38:12 IST Report Abuse
தமிழ்மைந்தன் தேசத்துரோகி என காங்கிரஸ் அடையாளம் கண்டுகொண்டதோ?....
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
24-மார்-201919:50:16 IST Report Abuse
sridhar தேச விரோதி. மக்கள் வரிப்பணத்தில் பத்து வருஷம் jnu வில் படித்து படிப்பு ஏறாத மக்கு. தண்ட சோறு. தேசத்தை பிடித்த பீடை.
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
24-மார்-201919:12:38 IST Report Abuse
Rahim Gani ,பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 3 தொகுதிகிளிலும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி 5 தொகுதிகளிலும், விகாஷீல் இன்சாப் கட்சி 3 தொகுதிகளிலும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும் போட்டியிடுவதாக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் அம்மாநில பெகுசாராய் தொகுதியில் ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவர் கண்ணையா குமார் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது, ஆக காங்கிரஸ் +ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி சார்பில் தான் கங்ககைய்யா குமார் போட்டியிடவுள்ளார்
Rate this:
Share this comment
Kannan Iyer - Bangalore,இந்தியா
25-மார்-201917:02:01 IST Report Abuse
Kannan Iyerசரியாக பாருங்கள். அங்கே மும்முனைப் போட்டி ராஷ்ட்ரீய ஜனதா தளம், பா ஜ க மற்றும் கன்னையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X