அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் போட டோக்கன் கொடுத்த அதிமுக வேட்பாளர்

Added : மார் 24, 2019 | கருத்துகள் (10)
Advertisement
டோக்கன், வேட்பாளர், அதிமுக, தேர்தல்

மயிலாடுதுறை: அதிமுக வேட்பாளர் ஒருவர் தன்னோடு பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு டூ வீலருக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசை மணி சீர்காழியில் பிரச்சாரத்தின் போது உடன் சென்ற இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்காக டோக்கன் வழங்கியுள்ளார். இதனை அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் , 100 டோக்கன் களையும், ரூ. 10 ஆயிரத்து 870 பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட டோக்கன் களில் நகர செயலாளர் பக்கிரிசாமியின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை லோக்சபா தொகுதி அதிமுக., வேட்பாளர் ஆசைமணி சீர்காழி நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.ம ணியன், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொன்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் டூ வீலர்களில் உடன் சென்றனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ 100க்கு பெட்ரோல் போடுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. அதனை கட்சி தொண்டர்கள் எடுத்து சென்று புதிய பஸ் ஸ்டான்டு அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தங்களது டூவலர்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பிரச்சாரப் பேரணியில் பங்கேற்றனர். இதுகுறித்து தகவலறிந்த சிறப்பு தாசில்தார் சுவாமிநாதன் தலைமையிலான பறக்கும் படையினர் பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். பறக்கும் படையினர் வருவதை அறிந்த தொண்டர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதனை தொடர்ந்து பறக்கும் படையினர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட டோக்க ன்களையும், ரூ 10,870 பணத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டோக்கன்களில் சீர்காழி நகர அதிமுக செயலாளர் பக்கிரிசாமியின் பெயர் அச்சிடப்பட்டு, வரிசை எண்கள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
24-மார்-201917:24:23 IST Report Abuse
சுந்தரம் சென்ற சட்டமன்ற தேர்தலின்போது பிரபல காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்ட தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வேட்பாளருக்கு சொந்தமான கடையில் இருந்து பாத்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் பெறுவதற்கு வசதியாக டோக்கன்கள் வழங்கப்பட்டது.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
24-மார்-201917:37:27 IST Report Abuse
சுந்தரம் இன்றைய தலைவலியின் சித்தப்பா தொகுதியில்தான்...
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
24-மார்-201917:17:20 IST Report Abuse
pattikkaattaan தேர்தல் முடிந்து இருக்கு ... யாருகிட்ட .. ம்ம்
Rate this:
Share this comment
Cancel
ANANDAKUMAR - coimbatore,இந்தியா
24-மார்-201917:03:52 IST Report Abuse
ANANDAKUMAR பிடிபட்ட அனைத்து டோக்கன்களையும் கைப்பற்றி அதன் மதிப்பை வேட்பாளர் செலவுக்கணக்கில் சேர்த்துவிடுவார்கள். இதுதான் நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X