பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

Added : மார் 24, 2019
Advertisement
மழை , வறண்ட வானிலை , ஆய்வு மையம், வாய்ப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
கோடை காலம் துவங்குவதை அடுத்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. (மார்ச் 24,28) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. (மார்ச் 25,26,27) தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். வேலூர் ,திருவண்ணாமலை ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி , சேலம் ,நாமக்கல் , திருச்சி ,கரூர், திண்டுக்கல்,மதுரை ஆகிய உள்மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. இவ்வாறு ஆய்வு மையம் கூறியுள்ளது

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X