அத்வானியிடம் கேளுங்கள்: உமா பாரதி பதில்

Updated : மார் 24, 2019 | Added : மார் 24, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் அத்வானி போட்டியிடாதது குறித்து அவர் தான் சொல்ல வேண்டும் என மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.







அமித்ஷா போட்டி :

வரும் லோக்சபா தேர்தலில் மூத்த தலைவர் அத்வானி போட்டியிடவில்லை. கடந்த தேர்தலில் அவர் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை காந்தி நகரில் அமித்ஷா போட்டியிடுகிறார். பா.ஜவில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் விமர்சனங்கள் வந்தன. அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. பா.ஜ வின் மூத்த தலைவர்களான சாந்த குமார், பி.சி கந்தூரி மற்றும் காரியமுண்டா உள்ளிட்ட தலைவர்களும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இவர்களுக்கு பதிலாக, புதிய இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் எனவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.








அத்வானி முடிவு :


அத்வானி போட்டியிடாதது குறித்து, பா.ஜ வின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உமா பாரதி கூறுகையில், லோக்சபா தேர்தலில் அத்வானி போட்டியிடாதது அவரது விருப்பம். அவரிடம் தான் இதை பற்றி கேட்க வேண்டும். இந்த குழப்பங்களுக்கு அத்வானி விரைவில் பதிலளிப்பார். அது அவர் முடிவு.







பிரார்த்தனை :


அத்வானி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டாலும், போட்டியிடவில்லை என்றாலும் , அவர் மீது என்றுமே எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அது என்றும் குறையாது. தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற வேண்டும். அதுவே நாட்டிற்கு நல்லது. இதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு உமா பாரதி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-மார்-201908:22:20 IST Report Abuse
Srinivasan Kannaiya உள்கட்சி குழப்பம்... ஒரு நாள் வெளியே வரும்
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி பாஜக என்ன திமுகா போலவா என்ன. தொன்னுற்று நான்கு வயதில் நினைவிழந்த போதும் கட்சித் தலமையை விடாப்பிடியாக வைத்துக்கொள்ள. ஊழல் சாம்ராஜ்யத்தில் தான் இது சாத்தியம். கொள்ளையடித்த பணம் வேறு யாருக்கும் தெரியாக்கூடாதே.
Rate this:
Share this comment
Cancel
raj - salem,இந்தியா
25-மார்-201906:52:19 IST Report Abuse
raj மோடி கட்சியின் மூத்த தலைவர்களுக்கு சீட் கொடுக்காமல் அல்வா கொடுத்து விட்டார். விரைவில் மோடிக்கு மக்கள் அல்வா .
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
25-மார்-201909:56:14 IST Report Abuse
THENNAVANஆடு நனையுதேன்னு ஓநாய்கள் வூளை விடுமாம் அதுபோலத்தான் இருக்கு பலரின் வூளை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X