பதிவு செய்த நாள் :
இனிப்பா...கரும்பு சக்கையா?
உ.பி.,யில் கட்சிகள் திண்டாட்டம்

நாட்டிலேயே அதிகமாக, 80 லோக்சபா தொகுதிகளை பெற்றிருக்கும் உத்தர பி.,யில், மதம், இன பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கும், முக்கியமான ஒரு அம்சமாக, கரும்பு திகழ்கிறது.

 இனிப்பா,கரும்பு,உ.பி.,கட்சிகள்,திண்டாட்டம்

மாநிலத்தின் மேற்கு பகுதி, மாநிலத்தின் கரும்பு பூமி. இந்த பகுதியில், கரும்பு பொருளாதாரத் தின் மதிப்பு, 40 ஆயிரம் கோடி ரூபாய். இதை நம்பி, 40 லட்சம் விவசாயிகள் உள்ளனர். பாதிப்பு

நாட்டில் கரும்பு அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமும், உ.பி.,யே. கரும்பு உற்பத்தியாளர் களுக்கு உரிய பணம் சென்றடையாமல் போனால், அது, தேர்தலில், பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இரு ஆண்டுகளுக்கு முன், உ.பி.,யில் சட்டசபைத் தேர்தல் நடந்த போது, பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையில், 'கரும்பு உற்பத்தியாளர்களுக்கு, குறித்த நேரத்தில் அதற்குரிய பணம் பட்டுவாடா செய்யப்படும்' என, குறிப்பிட்டிருந்தது.

நடப்பு, 2018 - 19 நிதியாண்டில், உ.பி.,யில் உள்ள, 119 சர்க்கரை ஆலைகள், விவசாயி களிடம் இருந்து, 23 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கரும்புகளை, கொள்முதல் செய்துள்ளது. அதுபோல, 2018 - 19 நிதியாண்டில், கரும்பு விவசாயிகளுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், உ.பி.யில் மொத்தமுள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., 71ஐ கைப்பற்றியது. அதனால், பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்றது.உ.பி.,யில்

உள்ள தொகுதிகளில், 25 - 30 தொகுதிகளில், கரும்பு விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். இவர்களின் பிரச்னைகள், இந்த தொகுதிகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாக்பட், பல்ராம்பூர், பிஜ்னோர், மீரட், முஸாபர்நகர், ஷஹாரன்பூர், ஷாம்லி, சீதாப்பூர் ஆகிய மாவட்ட ங்கள் கரும்பு விவசாயத்தை நம்பி உள்ளன. தற்போதைய தேர்தலில், கரும்பு உற்பத்தி செய்யும் மாவட்டங்களில், பா.ஜ.,வுக்கு சாதகமான சூழல் காணப்படவில்லை. கைரன் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், பா.ஜ., தோற்றதன் காரணமும் அதுவே.கடந்த, 2014ல் இந்த தொகுதியை வென்ற, பா.ஜ., இடைத் தேர்தலில், கரும்பு விவசாயிகள் பிரச்னையால், ராஷ்ட்ரீய லோக்தளத்திடம் தோல்வியை தழுவியது.

கரும்பு விவசாயிகளுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி உள்ளபோதும், பிற பயிர்களை ஒப்பிடுகை யில், கரும்பு அதிக லாபம் தரக்கூடியதாக இருப்பதால், அதை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
வாக்குறுதி

கடந்த, 2017ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், 'கரும்பு விவசாயிகளுக்கு, 14 நாட்களில் நிலுவைத் தொகை பட்டுவாடா செய்யப்படும்' என, பா.ஜ., வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி நீரில் எழுதிய எழுத்தாக காணாமல் போனது.

லோக்சபா தேர்தலில், கரும்பு விவசாயிகளின் கோபம், வெற்றி வாய்ப்பை பாதிக்கக் கூடாது என்ற நோக்கத்தில், அவர்களை சமாதானம் செய்யும் நடவடிக்கைகளில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டனர். சில நாட் களுக்கு முன், உ.பி., தலைமைச் செயலர், அனுப்சந்திரா பாண்டே, சர்க்கரை ஆலை உரிமையாளர்களை அழைத்து, விவசாயி களுக்கு சேர வேண்டிய தொகையை, உடனே தரும்படி நிர்ப்பந்தம் செய்தார்.

தவிர, கடந்த, 1ம் தேதி, பிரதமர், நரேந்திர மோடி தலைமையில் கூடிய, பொருளாதார விவகாரங்கள் மீதான, கேபினட் குழு,சர்க்கரை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு, ரூ.7,900 - 10 ஆயிரத்து, 540

Advertisement

கோடி கடன் வழங்கும் திட்டத்துக்கு, ஒப்புதல் அளித்தது.

தற்போதைய பருவத்தில், கரும்பு உற்பத்தி அமோகமாக உள்ளது. இருப்பினும், அதை கொள்முதல் செய்வதில், சர்க்கரை ஆலைகள் ஆர்வம் காட்டவில்லை; பல சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.உலகளவில் சர்க்கரை விலை குறைந்திருப்பதே இதற்கு காரணம்.

உதவித்தொகை

கரும்பை விற்க முடியாத விவசாயிகள், வேறு வழியின்றி,கால்நடைகளுக்கு தீவனமாக குறைந்த விலைக்கு, அதை விற்று வருகின்ற னர்.மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த திட்டப்படி, நாடு முழுவதும் விவசாயி களின் வங்கிக் கணக்குகளில், 2,000 ரூபாய் உதவித் தொகை செலுத்தப்படுகிறது. ஆனால், உ.பி., மாநில விவசாயிகள், 'எங்களுக்கு பிச்சை போடத் தேவையில்லை. நாங்கள் உற்பத்தி செய்த கரும்புக்கு உரிய விலை கிடைத்தால் போதும்' என, கோபத்துடன் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், லோக்சபா தேர்தலில், உ.பி., மாநில கரும்பு விவசாயி களின் ஓட்டுகள், எந்த கட்சிக்கு, சர்க்கரையாய் இனிக்கப் போகிறது; எந்த கட்சி, கரும்பு விவசாயிகளிடம் சிக்கி, சக்கையாய் மாறப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- கே.எஸ்.நாராயணன் - நமது சிறப்பு நிருபர்


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sams - Palakkad,இந்தியா
25-மார்-201922:18:09 IST Report Abuse

samsAngheum modikku aappa . Enna kodumai sir ithu

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-மார்-201920:00:40 IST Report Abuse

Pugazh V"2018 - 19 நிதியாண்டில், கரும்பு விவசாயிகளுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது"/ கார்ப்பரேட் நட்பு அரசு தான் பாஜக அரசு என்று சொன்னால், பாஜக வாசகர்கள் காச்மூச் என்று கத்துகிறார்கள். இதற்கு என்ன விளக்கம் என்று எழுதமாட்டார்கள். ஆலைகள் காங்கிரஸ் காரனோடது அதிகாரிகள் காங்கிரஸ் என்று சொல்வார்கள். ஆட்சி யில் பாஜக தானே? புரிந்தால் சரி.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-மார்-201912:31:28 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்வினை விதைச்சவன் வினை அறுப்பான். ஆனா இங்கே கரும்பை வெதைச்சிட்டு வினையை அறுவடை செய்றாங்க..

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X