அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க.,வில் அதிருப்தி குரல்!: ஒதுங்கும்
நிர்வாகிகளால் விழி பிதுங்கும் வேட்பாளர்கள்

அ.தி.மு.க.,வில், ஒட்டாமல் ஒதுங்கும் நிர்வாகிகளால், தேர்தல் பிரசார பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தனித்தனியே முறுக்கிக் கொண்டிருக்கும் நிர்வாகிகளை, ஒருங்கிணைக்க முடியாமல், வேட்பாளர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

அ.தி.மு.க.,வில்,அதிருப்தி,குரல்!,ஒதுங்கும், நிர்வாகிகளால்,விழி பிதுங்கும்,வேட்பாளர்கள்

ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க.,வில் உள்ள, அனைத்து அணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
'மனமிணையவில்லை'

மாவட்டச் செயலர்கள், அனைத்து அணி நிர்வாகிகளையும், அரவணைத்துச் சென்றனர். அனைவரும், தங்களுக்குள் கருத்து வேறுபாடு கள் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற னர். இல்லையெனில், கல்தா கொடுத்து விடுவார், ஜெயலலிதா.அவரது மறைவுக்கு பின், கட்சியின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

'அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை' என, அக்கட்சி யின், ராஜ்யசபா, எம்.பி., மைத்ரேயன், எப்போதோ கூறியிருந்தது, இப்போதும் தொடர்கிறது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், வேட்பாளர் தேர்வில், முற்றிலும் புறக்கணிக்கப் பட்டு உள்ளனர்.

பன்னீர், தனி அணி துவக்கிய போது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர், மைத்ரேயன். பிரதமருக்கும், பன்னீருக்கும் இடையே பாலமாக இருந்தார். அவர், லோக்சபா தேர்தல் அல்லது சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட, வாய்ப்பு தரும்படி கேட்டார்; அவருக்கு, 'சீட்' வழங்கப் படவில்லை. இதனால், அவரும், அவரது ஆதரவாளர்களும்

ஒதுங்கி விட்டனர். பிரசார களம் பக்கமே, அவர்கள் தலைகாட்ட மறுக்கின்றனர்.

அதேபோல, பன்னீருக்கு ஆதரவு தெரிவித்தவர் களில் முக்கியமானவர், முன்னாள் அமைச்சர், ராஜ கண்ணப்பன். அவர், ராமநாதபுரம் அல்லது சிவகங்கையில், போட்டியிட விரும்பினார். இரண்டு தொகுதிகளையும், பா.ஜ.,விற்கு ஒதுக்கிவிட்டு, அவரை, 'அம்போ' என, அ.தி.மு.க., வினர் விட்டு விட்டனர். கோபத்தில் அவர், தி.மு.க., பக்கம் போய் விட்டார். அவரது ஆதரவாளர்களும், அவரது சமுதாய சங்கங்களும், இப்போது, தி.மு.க., பக்கம் திரும்பி விட்டன.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் செல்வாக்கானவர், முன்னாள், எம்.எல்.ஏ., மார்கண்டேயன். அவர், பன்னீர் அணியில் இருந்தார். சட்டசபை இடைத்தேர்தலில், அவருக்கு தான், 'சீட்' என்ற நிலை இருந்தது.

ஓ.பி.எஸ்., 'கப்சிப்!'

ஆனால், அவருக்கு தரப் படாமல், உள்ளூர் அமைச்சரின் சிபாரிசில், வேறு ஒருவர் நிறுத்தப்பட்டு உள்ளார். அந்த அதிருப்தியில் உள்ள மார்கண்டேயன், சுயேச்சையாக களம் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால், அங்கு, அ.தி.மு.க., வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பன்னீர் அணியிலிருந்த, முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி, முன்னாள், எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு மட்டுமே, 'சீட்' கிடைத்து உள்ளது. அவர்களுக்கும் வழங்கா விட்டால், கட்சி மீண்டும் பிளவுபடும் என்பதால், இ.பி.எஸ்., அணியினர் இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது.பன்னீர் அணியிலிருந்த, எம்.பி.,க்கள் யாருக்குமே, மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

பன்னீர் மகன்ரவீந்திரநாத்திற்கு, 'சீட்' வழங்கி உள்ளதால், அவரால் எதையும் தட்டிக் கேட்க முடியவில்லை.வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பு வரை, அ.தி.மு.க.,வின் எந்த அறிவிப்பும், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இருவர் பெயரில் வரும். தற்போது, கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தும், மகளிர் அணியினருக்கு வேண்டுகோள் விடுத்தும், இ.பி.எஸ்., மட்டுமே தனியாக அறிக்கை

Advertisement

வெளியிட்டுஉள்ளார். தேர்தல் பிரசாரத்தையும், அவர் தன்னிச்சையாக துவக்கினார். இதை சாதகமாக்கிய, இ.பி.எஸ்., ஆதரவாளர்கள், பன்னீர் ஆதரவாளர்களை புறக்கணித்து வருகின்றனர்.

தாமரை இலை தண்ணீர்
அதேபோல், இ.பி.எஸ்., தன் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களுக்கு மட்டுமே, முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்று, அவரை நம்பியுள்ள, மற்ற நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ஜெயலலிதா இருந்த போது, தேர்தல் வந்து விட்டால், அனைத்து அணியினரும், வேறுபாடு களை மறந்து, பிரசாரத்தில் முழு கவனத்தை யும் செலுத்துவர். தற்போது, அதிருப்தியில் உள்ளவர்கள், தாமரை இலை தண்ணீர் போல், எதிலும் ஒட்டாமல் ஒதுங்கி நிற்கின்றனர். அவர்களை சமாதானபடுத்தி,ஒருங்கிணைத்து, தேர்தல் பணியை செம்மைப் படுத்த, யாரும் நடவடிக்கை எடுக்க முன்வர வில்லை.

மாவட்டச் செயலர்களாக, அமைச்சர்களே இருப்பதால், அவர்களை மீறி, அனைத்து அணி நிர்வாகிகளையும் ஒருங்கிணைக்க முடியா மல், வேட்பாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இவர்களுக்குள் இருக்கும் மோதலை கண்டு, கூட்டணி கட்சி வேட்பாளர் களும், என்ன செய்வது என, தெரியாமல் தவித்து வருகின்ற னர். இதே நிலை நீடித்தால், அது எதிர்க்கட்சி யினருக்கு சாதகமாக அமையும் என்பதே, அ.தி.மு.க., தொண்டர் களின் கவலையாக உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-மார்-201900:38:11 IST Report Abuse

Pugazh Vபலமுறை பதிவிட்டு விட்டேன். "வாட்ச்மேன் களை கேட்டோட நிறுத்துங்கள். உள்ள விடாதீர்கள். போகும் போது வரும் போது ஒரு சல்யூட் அடிச்சுட்டு, குடுத்திருக்கிற மர ஸ்டூலில் பேசாம உக்கார சொல்லுங்க. சௌக்கிதார்களெல்லாம் அரசியல் பேசணும்னா தெருவோர டீக்கடை ல போய் பேசணும்.

Rate this:
sams - Palakkad,இந்தியா
25-மார்-201922:14:18 IST Report Abuse

samsAppo modikku aappa .amitshavin sanakyathanam ambova?

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
25-மார்-201918:22:58 IST Report Abuse

BoochiMarunthuஎதுக்கு எடுத்தாலும் திமுக திமுக என்று காவிகள் புலம்புவதை பார்த்தால் திமுகவின் வெற்றியை உளவுத்துறை சொல்லிவிட்டது போல் உள்ளது

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X