'மோடிக்கு ஓட்டு கேட்டால் அடித்து உதையுங்கள்': எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

Added : மார் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்கள் மற்றும் அவரது பெயரை உச்சரிப்பவர்களை அடித்து உதைக்கும்படி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, மதச் சார்பற்ற ஜனதா தள, எம்.எல்.ஏ., சிவலிங்க கவுடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அரிசிகெரே என்ற இடத்தில் நடந்த, மதச் சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் கூட்டத்தில், எம்.எல்.ஏ., சிவலிங்க கவுடா பேசியதாவது:கடந்த தேர்தலின்போது, சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு வருவதாகவும், மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்வதாகவும், மோடி வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதிகளை, பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. எனவே, மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்கள் மற்றும் அவரது பெயரை உச்சரிப்பவர்களை பார்த்தால், அடித்து உதையுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த, பா.ஜ., செய்தி தொடர்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான சுரேஷ் குமார், பிரதமர் மோடிக்கு எதிராக, கவுடா, வன்முறையை துாண்டுவதாக குற்றஞ்சாட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sriwilli - jakarta,இந்தோனேசியா
25-மார்-201909:17:06 IST Report Abuse
sriwilli ivanai mudhalil .....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-மார்-201909:00:23 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடவில்லை என்றால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள் என்றார் அண்ணா ...படி அரசி திட்டம் கொண்டுவந்து போட்டார்.
Rate this:
Share this comment
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
25-மார்-201908:24:53 IST Report Abuse
thamodaran chinnasamy தரம் கேட்டவர்கள் இவர்கள். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X