லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, தமிழகத்தில், ஏப்., 18ல் நடக்கிறது. இந்தியா வில் அதிக மக்கள் கூடும் திருவிழாவான, மதுரை சித்திரை திருவிழா,அந்த தேதியில் தான், உச்சகட்டத்தை எட்டியிருக்கும். ஏப்., 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் அம்பாரி யானை, ஒட்டக சேனையுடன் குதுாகலமாக நடைபெறும்.
விழா, 15ம் தேதி முதல் சூடுபிடிக்கத் துவங்கும். அன்றைய தினம், மதுரைக்கு அரசியாக, மீனாட்சி அம்மன் மகுடம் சூடும் பட்டாபிஷே கம், 16ம் தேதி திக்விஜயம், 17ம் தேதி திருக் கல்யாணம், 18ம் தேதி தேரோட்டம், அன்றே கள்ளழகர் எதிர்சேவை, 19ம் தேதி அழகர் ஆற்றில் எழுந்தருளல் என, தினமும் முக்கிய நிகழ்ச்சிகள் களைகட்டும்.இந்த நாட்களில்,
மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, மாட்டு வண்டிகளில்
வந்து பங்கேற்பர்.மீனாட்சி - -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பார்த்து,
மறுநாள் தேர் இழுத்து, மாலையில் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து, மறுநாள்
காலை, வைகை யில் இறங்கும் அழகரை, சர்க்கரை சொம்புடன் தரிசிப்பது தான்,காலம் காலமாக இருக்கும் வழக்கம்.
மதுரையில் இருந்து மாற்றலாகி சென்றவர்கள், எந்த ஊரில் இருந்தாலும், இந்த4 நாட்களும் மதுரைக்கு வந்து, திருவிழாவில் ஐக்கியமாகி விடுவர். தொன்று தொட்டு வரும் வழக்கம் இது. தேர்தல் நடக்கும், 18ம் தேதி, தேரோட்டத்தை பார்த்து, உடனே ஊர் திரும்ப மாட்டார்கள். மறுநாள் அழகரை பார்த்துவிட்டே, கூட்டமாக திரும்புவர்.
அழகரை பார்க்க, 5 லட்சம் பேர் கூடும் நிலையில், அதில், 2.50 லட்சம் பேர், தேர் பார்த்து, அழகரை பார்த்து திரும்புவர்கள்.ஊர் பாசமும், திருவிழா நேசமும் உடைய இவர்களின் ஓட்டுகளில் பாதி,
சென்னையிலும், மீதி, இதர ஊர்களிலும் இருக்கும்.தேர் பார்த்து, ஊருக்கு ஓடி
வந்து ஓட்டு போடுவது என்பது, இவர்களால் முடியாத காரியம். உள்ளூர்
வாக்காளர்களுக்கு வேண்டுமானால், இந்த,
இரண்டு மணி நேர நீட்டிப்பு உதவலாமே தவிர, வெளியூர் வாழ் மதுரைக்காரர்களுக்கு இந்த நீட்டிப்பு நேரத்தால், எந்த பிரயோஜனமும் இல்லை.
பாரம்பரியமும், பழம் பெருமையும் கொண்ட சித்திரை திருவிழாவை, அதன் கொண்டாட் டத்தை, அது தரும் உறவுகளை, புதுப்பிக்கும் நட்புகளை, எதற்காகவும், வெளியூரில் வாழும் மதுரைக்காரர் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. மதுரைக்காரர் களின் ஓட்டுக்கு வைக்கப்பட்ட வேட்டாகவே, இந்த தேர்தல் தேதி கருதப்படுகிறது.
எல்.முருகராஜ் எழுத்தாளர்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (50)
Reply
Reply
Reply