பொது செய்தி

இந்தியா

26 லட்சம் பாட்டில் அழியாத மை : தேர்தல் ஆணையம் வாங்குகிறது

Added : மார் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 26 லட்சம் பாட்டில் அழியாத மை : தேர்தல் ஆணையம் வாங்குகிறது

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பயன்படுத்துவதற்காக, 33 கோடி ரூபாய் மதிப்புள்ள, 26 லட்சம் அழியாத மை பாட்டில்களை, தேர்தல் ஆணையம் வாங்க திட்டமிட்டுள்ளது.

தேர்தல்களில், ஓட்டளித்ததற்கு அடையாளமாக, வாக்காளர்களின் கை விரலில், அழியாத கறுப்பு மை வைக்கப்படுகிறது. இதனால், கள்ள ஓட்டு பதிவு தடுக்கப்படுகிறது.கடந்த, 1962ல், தேர்தலில் பயன்படுத்தப்படும், அழியாத மை பாட்டில்களை வாங்க, கர்நாடக மாநில அரசு நிறுவனமான, 'மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ்' நிறுவனத்துடன், தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்தது.அன்று முதல், இன்று வரை, இந்த நிறுவனத்திடம் தான், அழியாத மை பாட்டில்கள் வாங்கப்படுகின்றன.

இந்நிலையில், லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடக்கஉள்ளன.இதில் பயன்படுத்துவதற்காக, அழியாத மை அடங்கிய பாட்டில்களை, மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் நிறுவனத்திடம் வாங்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்காக, 26 லட்சம் அழியாத மை பாட்டில்களுக்கு, தேர்தல் ஆணையம், 'ஆர்டர்' கொடுத்துள்ளது; இதன் மதிப்பு, 33 கோடி ரூபாய்.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, 21.5 லட்சம் பாட்டில்கள் வாங்கப்பட்டன. தற்போது, அதைவிட கூடுதலாக, 4.5 லட்சம் பாட்டில்கள் வாங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
25-மார்-201916:58:25 IST Report Abuse
Mohammed Abdul Kadar இதற்க்கு மாதமாக பிங்கர் பிரிண்ட் சிஸ்டம் கொண்டுவந்தால் நல்லது ,ஒருவர் ஒட்டு போட்டு விட்டால் தமிழ் நாட்டில் வெறுங்கும் ஒட்டு போட்டால் பிங்கர் பிரிண்ட் சிஸ்டம் மூலம் மறுமுறை ஒட்டு போடா முடியாது , நாலு கோடி சேமிக்கலாம் ,மை வெஸ்ட் ,
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
25-மார்-201916:55:16 IST Report Abuse
Mohammed Abdul Kadar ithu aniyaya selavu ,adarkku machamaka oruvai marumuar tamil nattail yenata oru idatilum ottu poda mudiyathavaru finger print tem kodu varalam
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-மார்-201909:01:48 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்ல பாருங்கள் அழியா மையா அழியும் மையா என்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X