பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தீவிரம்!
சட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க வரித்துறை :
தேர்தலை நேர்மையாக நடத்த அதிரடி நடவடிக்கை

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், சட்ட விரோதமாக, பணம், மது பாட்டில்கள், தங்கம் ஆகியவை புழங்குவதை தடுக்க, மத்திய மறைமுக வரிகள் வாரியம், தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சட்டவிரோத,பண,புழக்கத்தை,தடுக்க,வரித்துறை,தீவிரம்,தேர்தலை நேர்மையாக,நடத்த,அதிரடி,நடவடிக்கை


லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டமாக நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, மே, 23ல் நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை, தேர்தல் ஆணையம், சமீபத்தில் கூட்டியது.அப்போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள், மத்திய - மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளிடம் கூறியதாவது:தேர்தலை சிறப்பாக நடத்த, அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்கவும், சட்ட விரோதமாக, பணம், மது, தங்கம் போன்றவை புழங்குவதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


உத்தரவு


இந்நிலையில், சி.பி.ஐ.சி., எனப்படும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், சட்ட விரோத பணப்புழக்கத்தை கண்காணிக்கும் பணியில், வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அத்துடன், மது, போதைப் பொருட்கள், தங்கம் போன்றவற்றின் புழக்கத்தையும் கண்காணித்து வருகிறோம்.இது தொடர்பாக கிடைக்கும் தகவல்களை, பல்வேறு அரசு அமைப்புகளுடனும், தங்களுடனும் பகிர்ந்து கொள்ளும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ள நோட்டுகள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுத்துள்ளோம். கார், ரயில்கள், விமானங்கள் ஆகியவற்றில் பயணிப்போரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஏனெனில், வாகனங்களில் தான், சட்ட விரோதமாக பணம் கடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.


கண்காணிப்பு



இதற்காக, சி.பி.ஐ.சி., சார்பில், சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள், சரியான ஆவணங்கள் இன்றி, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக, பணம் எடுத்துச் செல்வோரை கண்காணித்து, உடன் நடவடிக்கை எடுக்கும். வேட்பாளர்கள்,அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளை, நாங்களும் கண்காணித்து வருகிறோம். செலவு கணக்கில் காட்டாமல், அவர்கள் செய்யும் செலவுகளை கண்காணிப்போம். வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகள், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டுவது தெரிந்தால், அது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம். வாக்காளர்களுக்கு, பணம், பொருட்கள், லஞ்சமாக கொடுக்கப்படுகிறதா

Advertisement

என்பதை கண்காணிப்பது தான், பெரும் சவாலான பணி.சட்டவிரோத பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி, தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதே, எங்கள் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.


மது கடைகளுக்கு எச்சரிக்கை!

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, கலால் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:மதுக்கடைகள், தினமும் திறக்கும் நேரத்தையும், மூடும் நேரத்தையும், முறையாக கடைப்பிடிக்க வேண்டும். முன் கூட்டியே திறப்பதும், இரவில் கூடுதல் நேரம் திறந்து வைத்திருப்பதும் தவறு. விதிமுறைகளை மீறும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில், சரக்குகளின் இருப்பு பட்டியல், முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு கலால் துறை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
deva - chennai,இந்தியா
28-மார்-201913:22:41 IST Report Abuse

devaதேர்தல் முடியும்வரை பணபரிமாற்றத்தின் உச்சவரம்பை ரூ 2000 ஆகவும் அதற்க்கு மேல் எல்லாம் டிஜிட்டல் என்று கட்டாயமாக்குங்கள்,ATM உச்சவரம்பையும் ரூ 2000 என்று நடைமுறை படுத்துங்கள்,எந்த வேட்பாளர் பண பட்டுவாடா என்ற புகாரில் சிக்குகிறாரோ அவரை உடனே தகுதி இழப்பு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்,இந்த செயலில் வேட்பாளருக்கு உடந்தையாக வேலை செய்பவரது குடியுரிமையை ரத்து செய்யுங்கள்.நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தால்தான் தேர்தல் ஒழுங்காக நடக்கும் ,சும்மா பெயருக்கு வழக்கு போட்டு வருட கணக்கில் இழுத்து இழுத்து பதவி காலம் முடிந்த பின் தீர்ப்பு வந்து..... .அலுத்து பொய் விட்டது.நாட்டில் நடக்கும் அனைத்து அக்கிரமங்களுக்கும் அச்ச்சாரமே இந்த கள்ள பணத்தை வைத்து நடக்கும் தேர்தல்தான்.

Rate this:
25-மார்-201920:52:12 IST Report Abuse

ஆப்புசிரிப்பு மூட்டுவதில் வடிவேலுவை மிஞ்சுறாங்க.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-மார்-201920:04:56 IST Report Abuse

Pugazh Vஅரசின் கையாலாகாத்தனம் அல்லது தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. என்னமோ... கருப்பு பணத்தை புடிச்சாச்சு கள்ளப்பணத்தை ஒழிச்சாச்சு என்று காவடி ஆடினார்கள்?

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X