அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., ஆதரவு பெண் ஓட்டு
குறி வைக்கிறார் ஸ்டாலின்

அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பெண்களின் ஓட்டுகளை பெறவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன் பிரசாரத்தில், ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்கு, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

 ஜெ., ஆதரவு ,பெண் ஓட்டு , குறி ,வைக்கிறார்,ஸ்டாலின்


ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க., செயல்படுகிறது. லோக்சபா மற்றும், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், ஏப்ரல், 18ல் நடக்கிறது.அதில் போட்டியிடும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி களின் வேட்பாளர்களை ஆதரித்து, ஸ்டாலின்,

பிரசாரம் செய்து வருகிறார்.அவர், தன் பிரசாரத்தில் பேசியதாவது:


ஜெயலலிதா வுடன், நமக்கு கொள்கை, கருத்து வேறுபாடு இருக்கலாம்.ஆனால், இறந்தது என்ன சாதாரண நபரா; இந்த மாநிலத்தின் முதல்வர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், திட்டங்கள் தீட்டுவது, மக்கள் பணி ஆற்றுவது போன்ற பணிகள், ஒருபுறம் இருந்தாலும், முதல் வேலையாக ஒன்று உள்ளது.

அது என்னவெனில், ஜெயலலிதா மரணம் குறித்து, உரிய விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு சொல்வோம்; குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பு வோம். பன்னீர்செல்வமும், பழனிசாமியும், அ.தி.மு. க.,வை, அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டனர். இவ்வாறு,அவர் பேசி வருகிறார்.
கட்சியில், சாதாரண தொண்டர்களுக்கும், மேயர், எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர் போன்ற பதவிகளை கொடுத்தவர், ஜெயலலிதா. இதனால், அ.தி.மு.க.,

Advertisement

தொண்டர்கள், அவர் மீது, அதிக பற்று வைத்து இருந்தனர்.அவரின் ஆளுமை திறன், பெண்களை கவர்ந்தது.இதனால், பல பெண்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க முன்னுரிமை தந்தனர்.இதன் விளைவாகவே, ஜெ., மீதான அனுதாப ஓட்டுக்கள் மற்றும் பெண்களின் ஓட்டுக்களை, தி.மு.க.,வுக்கு திருப்பி விடும் நோக்கில், ஸ்டாலின், தன் பிரசாரத்தில், ஜெய லலிதா மரணம் தொடர்பாக பேசி வருகிறார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
27-மார்-201917:17:17 IST Report Abuse

sankarஇவர் பேசும் பேச்சுக்கு ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள் - அந்த அளவுக்கு மத துவேசம் இவரது பேச்சில் - ஒரு சாராரை திருப்தி படுத்த இப்படியா பேசுவது

Rate this:
sugumaran - chennai,இந்தியா
27-மார்-201906:54:47 IST Report Abuse

sugumaranநாட்டு பற்று உடையவர் யாரும் திமுக விற்கு ஓட்டளிக்க மாட்டார்கள்.

Rate this:
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
26-மார்-201901:25:14 IST Report Abuse

Vanavaasamஅம்மாவின் மரணம் காரணம் கட்டுமரமும் அதுக்கு சோம்பு தூக்கிய அம்பலகனும் தான் ..

Rate this:
மேலும் 89 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X