பதிவு செய்த நாள் :
'மும்பை தாக்குதலின் போதும்
ராணுவம் தயாராக இருந்தது'

புதுடில்லி: ''மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போதும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, ராணுவம் தயாராக இருந்தது; ஆனால், அப்போதைய ஆட்சியாளர்கள், இதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை,'' என, ராணுவ அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன் கூறினார்.

மும்பை,தாக்குதல்,ராணுவம்,ராணுவ அமைச்சர், பா.ஜ.,நிர்மலா சீதாராமன்


ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக் குள் புகுந்த, நம் விமானப்படையின் போர் விமானங்கள், பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தன.இந்த தாக்குதலை, காங்., மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, கடுமையாக

விமர்சித்திருந்தார். இதற்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008ல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை யாராலும் மறக்க முடியாது. அப்போதும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, நம் ராணுவம் தயாராக இருந்தது.

ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த, காங்., தலைவர்களுக்கு, ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான தைரியம் இல்லை. தற்போது ஆட்சியில் இருப்பது, பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு. அதனால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி



உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், அம்மாநில

Advertisement

முதல்வரும், பா.ஜ.வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்ய நாத் பேசியதாவது: 'மும்பை தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு, பாகிஸ் தானை முழுமையாக குற்றம் சாட்ட முடியாது' என, காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்; இது, வெட்கக்கேடான செயல்.

பிரதான எதிர்க்கட்சி யான காங்கிரஸ், பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து உபசரிக்கிறது. ஆனால், பா.ஜ., அரசு, பயங்கர வாதிகளுக்கு வெடிகுண்டு மற்றும் தோட்டாக் களை பரிசாக கொடுத்து, அவர்களை மேலோகத்துக்கு அனுப்பி வைக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aloy - india,இந்தியா
28-மார்-201913:50:11 IST Report Abuse

aloyநிர்மலா சீதாராமன் என்ன செய்தி தொடர்பாளரா ?

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
25-மார்-201921:50:11 IST Report Abuse

muruguமோடியை ஆசிர்வதித்த சாமியார்... 6 கொலை, 16 வயசுப் பொண்ணோட உறவு, 12000 கோடி சொத்துக்கு சொந்தக்காரர்..?one india tamil

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
25-மார்-201921:49:42 IST Report Abuse

muruguதோட்டங்களும் குண்டுகளும் கொடுப்பது நம்மை தாக்குவதற்கா ?அதை வைத்து தேர்தல் லாபம் அடையவா ???

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X