பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 நாளை!, தமிழகத்தில், வேட்பு மனு, தாக்கலுக்கு, கடைசி ,நாள்

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் மற்றும், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல், நாளை(மார்ச் 26) மாலையுடன் நிறைவு பெறுகிறது. இரு நாட்களே இருப்பதால், இன்றும், நாளையும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்ய வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களின் பரிசீலனை, நாளை மறுநாள் நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற, வரும், 29ம் தேதி கடைசி நாள்.
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரல், 18ல், தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், 19ம் தேதி துவங்கியது.

254 பேர்:


முதல் மூன்று நாட்கள், மனுதாக்கல் மந்தமாக இருந்தது. சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும், மனு தாக்கல் செய்தனர்.

கடந்த, 22ம் தேதி, அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களில் பலர், மனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை, லோக்சபா தொகுதிகளில், 35 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 254 பேர் மனு தாக்கல் செய்தனர்.
சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதி களில், 18 பெண்கள் உட்பட, 72 பேர், மனு தாக்கல் செய்தனர். லோக்சபா

தேர்தலில், இதுவரை அதிகபட்சமாக, நாமக்கல் தொகுதியில், 17 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக, தென்காசி தொகுதியில், ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார். இன்று, எல்லா தொகுதிகளிலும், நிறைய பேர் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் மட்டுமின்றி, கூட்டணி கட்சி வேட்பாளர்களும், இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

'டோக்கன்!'


மனு தாக்கல் செய்ய, நாளை கடைசி நாள். எனவே, அரசியல் கட்சி வேட்பாளர்கள், இன்று மனுதாக்கல் செய்ய, முடிவு செய்துள்ளனர். இன்றும், நாளையும், நிறைய கட்சியினர் மனு தாக்கல் செய்ய உள்ளதால், தேர்தல் அலுவலகங்களில், கூட்டம் அலைமோதும்.வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன், ஏராளமானோர் வருவதை தடுக்க, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் முன், கூடுதல் பாதுகாப்புக்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரத்திற்குள், அலுவலகம் வருவோருக்கு, 'டோக்கன்' வழங்கி, அனைவரும் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி,தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள், 27ம் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற, 29ம் தேதி கடைசி நாள். அன்று மாலை, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-மார்-201908:34:53 IST Report Abuse

Srinivasan Kannaiyaஸ்டாலினின் கனவை நிறைவேற்றுமா இந்த தேர்தல் .............?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-மார்-201908:33:51 IST Report Abuse

Srinivasan Kannaiyaபாராளுமன்ற தேர்தலை விட சட்டசபை தேர்தலுக்குதான் மிகவும் எதிர்பார்ப்பு... 9 ல் வென்றால் பன்னீர், பழனிக்கு ஆபத்தில்லை.

Rate this:
blocked user - blocked,மயோட்
25-மார்-201904:14:01 IST Report Abuse

blocked userமார்ச் இறுதிக்குள் யார் போட்டியிடுகிறார்கள் என்று தெரிந்துவிடும்... ஆகவே இந்துக்கள் ஒன்றுபட்டு தேசவிரோத சக்திகளை ஓரங்கட்டுவோம் என்று உறுதிமொழி எடுக்கவேண்டும்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X