பா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு!

Updated : மார் 25, 2019 | Added : மார் 25, 2019 | கருத்துகள் (6)
Advertisement

பீஹாரில், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து விட்டாலும், தொகுதிப் பங்கீட்டில், தொடர்ந்து புகைச்சல் உள்ளது. பா.ஜ.,வுக்கு, உயர் வகுப்பினர் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும், 'பனியா' வகுப்பினர் அதிகம் உள்ள தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது, கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.






பீஹாரில் உள்ள, 40 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. பீஹார் முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., மற்றும் மத்திய அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வானின், லோக் ஜன சக்தி கூட்டணி அமைத்து உள்ளன.


கூட்டணி:

பஸ்வான் கட்சிக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்கி, தலா, 17 தொகுதிகளில், ஐ.ஜ.த., - பா.ஜ., போட்டியிட உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலின் போது, ஐ.ஜ.த., மற்றும் பா.ஜ., தனித்தனியாக போட்டியிட்டன. பா.ஜ., 22லும், அதன் கூட்டணி கட்சியான, லோக் ஜன சக்தி, ஆறு தொகுதிகளிலும் வென்றன. ஐ.ஜ.த., இரண்டில் மட்டுமே வென்றது. தற்போது, மீண்டும் கூட்டணி அமைந்துள்ள நிலையில், நிதிஷ்குமாரின் பெரும்பாலான கோரிக்கைகளை, பா.ஜ., ஏற்றுள்ளது. இரு கட்சிகளும், தலா, 17 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தன. இதுவே, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.




இந்நிலையில், இந்தக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. கடந்த, பல ஆண்டுகளாக, மாநிலத்தில் உள்ள, இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களின் ஆதரவு, பா.ஜ.,க்கு உள்ளது. ஆனால், தற்போது, இந்தப் பிரிவு மக்கள் அதிகம் உள்ள தொகுதிகள், பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்படவில்லை. உயர் வகுப்பினர் மற்றும் பனியாக்கள் அதிகம் உள்ள தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன.


முயற்சி:

இதன் மூலம், தங்கள் கட்சியை, உயர் வகுப்பினர் கட்சியாக காட்டுவதற்கு, ஐக்கிய ஜனதா தளம் முயற்சிப்பதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், கூட்டணியில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, இதையும் சகிக்கிறது.கடந்த தேர்தலில், அதிக தொகுதிகளில் வென்றும், தற்போது, குறைந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நிலையில், பா.ஜ., உள்ளது. மேலும், கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை, ஐக்கிய ஜனதா தளம் பறித்து உள்ளது.

தற்போது, ஜாதியின் அடிப்படையில், தங்களை பிரித்து பார்க்கவும் முயற்சி நடப்பதாக, பா.ஜ., தலைவர்கள் கூறியுள்ளனர். இதனால், இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் பிரிவைச் சேர்ந்தவர் களுக்கு, தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் கூறியுள்ளனர். ஜாதி அடிப்படையில், நிதிஷ்குமார் திட்டமிட்டு அரசியல் நடத்தியுள்ளதாகவும், அந்தத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

- கன்ஹையா பெலாரி , சிறப்பு செய்தியாளர் -

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
25-மார்-201909:29:37 IST Report Abuse
PANDA PANDI
Rate this:
Share this comment
Cancel
sams - Palakkad,இந்தியா
25-மார்-201908:38:05 IST Report Abuse
sams Biharil eps aatchiya bjp adanghivittathu
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-மார்-201908:05:08 IST Report Abuse
Srinivasan Kannaiya மீன் கிடைக்கும் இடத்தில் தான் வலை இடமுடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X