கேரளாவில் உரக்க ஒலிக்கும் கோஷ்டி கானம்

Updated : மார் 25, 2019 | Added : மார் 25, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோஷ்டி மோதல் என்று சொன்னதும், இது காங்கிரஸ் தொடர்பானது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். கேரளாவில், இரண்டு பிரிவுகளாக, காங்கிரஸ் செயல்படுவதால், வட மாவட்டங்களான, கோழிக்கோடு மற்றும் காசர்கோட்டில், பிரசாரம் இன்னும் துவங்கவில்லை.கேரளாவில், 20 தொகுதிகளுக்கு, ஏப்., 23ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், வட மாவட்டங்களான, கோழிக்கோடு மற்றும் காசர்கோட்டில், காங்கிரஸ்

கோஷ்டி மோதல் என்று சொன்னதும், இது காங்கிரஸ் தொடர்பானது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். கேரளாவில், இரண்டு பிரிவுகளாக, காங்கிரஸ் செயல்படுவதால், வட மாவட்டங்களான, கோழிக்கோடு மற்றும் காசர்கோட்டில், பிரசாரம் இன்னும் துவங்கவில்லை.latest tamil newsகேரளாவில், 20 தொகுதிகளுக்கு, ஏப்., 23ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், வட மாவட்டங்களான, கோழிக்கோடு மற்றும் காசர்கோட்டில், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணியில், பிரசாரம் துவங்கவில்லை. கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகள் பிரசாரத்துக்கு தயாராக இருந்தும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, காங்., தலைவர்கள் முன்வரவில்லை. இந்த மாநிலத்தில், முன்னாள் முதல்வர், உம்மன் சாண்டி தலைமை யில், 'ஏ' என்ற பிரிவும், மூத்த தலைவர், ரமேஷ் சென்னிதலா தலைமையில், 'ஐ' என்ற பிரிவும் செயல்படுகின்றன.

இதில் யார், 'வெயிட்' என்று காட்டும் போட்டியில், இரு பிரிவினரும் செயல்படுகின்றனர்; மாநிலம் முழுவதும் இதே நிலை உள்ளது. இந்த இரு மாவட்டங் களிலும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடது ஜனநாயகக் கூட்டணியும் சம நிலையில் உள்ளன. கடந்த தேர்தலில், இந்த இரண்டிலும், பா.ஜ., வேகமாக முன்னேறி வந்துள்ளது.


latest tamil news


காசர்கோட்டில், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த, உன்னிதன், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு சீட் கொடுக்கப்பட்டதால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கோஷ்டியினர், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மறுத்து வருகின்றனர். கோழிக்கோட்டில், வடக்கரை தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள, முன்னாள் மாநிலத் தலைவர், கே. முரளீதரனை வரவேற்க, 'ஏ' குழுவினர் சென்றனர்.

பேட்டி மற்றும் பிரசாரத்தின் போதும் உடனிருந்தனர். ஆனால், 'ஐ' பிரிவைச் சேர்ந்தவர்கள், இதே நேரத்தில் போட்டிக் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கோஷ்டி மோதல்களால், காங்., பிரசாரம், 'டல்'லடிக்கிறது. தேர்தலிலும் இது எதி ரொலிக்கும் என, கூட்டணிக் கட்சிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மார்-201911:09:08 IST Report Abuse
ஸாயிப்ரியா கோஷ்டி கானம் என்றவுடன் சரணம் என்று நினைத்து விட்டேன் மோதல் என்றால் எதிரணிக்கு சாதகம். கை கழுவப்படும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25-மார்-201910:25:08 IST Report Abuse
A.George Alphonse The Kosti Ganam,Poosal and Vesty kizhiyal are very common in Congress party.So as in this state also.
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
25-மார்-201909:27:59 IST Report Abuse
மூல பத்திரம் அங்கு வேஷ்டி கிழியும் சகாப்தம் ஆரம்பித்தால் பாஜக வெற்றிபெறும். எல்லாம் ஐயப்பன் அருள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X