அரசியல் செய்தி

தமிழ்நாடு

உறவுகளை பகையாக்கிய தேர்தல்!

Updated : மார் 25, 2019 | Added : மார் 25, 2019 | கருத்துகள் (58)
Advertisement

அரசியல், சில நேரங்களில் உறவுகளை பகையாக்கி விடும் என்பது உண்மை. இந்த தேர்தலில், உறவுகள் எதிரணியில் இடம் பெற்று, ஒருவரை ஒருவர் திட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


கன்னியாகுமரி தொகுதி யில், பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில செயல் தலைவர் வசந்தகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வசந்தகுமார், தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசையின் சித்தப்பா. எனவே, தமிழிசை, கன்னியாகுமரியில் பிரசாரத்திற்கு செல்லும் போது, சித்தப்பாவிற்கு எதிராக, பிரசாரம் செய்ய வேண்டியது கட்டாயம்.



ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் மகாராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தம்பி, லோகிராஜன், அ.தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். உடன்பிறந்த அண்ணனும் தம்பியும், ஓட்டுக்காக, ஒருவரை ஒருவர் விமர்சித்து, பிரசாரம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.




திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில், விஷ்ணுபிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் மைத்துனர். அன்புமணி, ஆரணி தொகுதியில், மைத்துனருக்கு எதிராக பிரசாரம் செய்தாக வேண்டும். அதேபோல், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களே, அ.ம.மு.க., சார்பில் போட்டி யிடுகின்றனர். இதன் காரண மாக, நட்பாக பழகிய அவர்கள், இந்த தேர்தலில் பதவிக்காக மோத வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
26-மார்-201905:01:48 IST Report Abuse
jay அரசியல் சுகத்துக்காக சொந்த உறவையே பகைக்கும் இவர்கள் மக்களை எவ்வளவு இலகுவாக ஏமாற்றுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
naser -  ( Posted via: Dinamalar Android App )
25-மார்-201922:08:26 IST Report Abuse
naser கன்னியாகுமரிமக்கள் கடலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் வசந்தகுமார் நீந்திசென்று வேட்புமனுதாக்கல் காவல்துறை திணறல்
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
25-மார்-201920:14:49 IST Report Abuse
சுந்தரம் மாறி மாறி அதிமுக ஆதரவு எதிர்ப்பு திமுக ஆதரவு எதிர்ப்பு. ஆனாலும் குடும்பத்துக்குள் சண்டை சச்சரவு எதுவும் இருக்காது . அதுபோலத்தான் அரசியலில் போட்டியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X