அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு தாராள பெட்ரோல்; 6 லட்சம் ஓட்டுகளை அள்ள, 'ஐஸ்'

Updated : மார் 25, 2019 | Added : மார் 25, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement

நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, போலீசில் பணிபுரியும், 1.02 லட்சம் பேரின், எரிபொருள் செலவு தொகையை அதிகரித்து வழங்க, டி.ஜி.பி., ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் வாயிலாக, போலீஸ் குடும்பங்களின், ஆறு லட்சம் ஓட்டுகள், ஆளுங்கட்சிக்கு கிடைக்குமா என்ற கேள்வி, எழுந்துள்ளது.



latest tamil news



தமிழக போலீசில், 1.02 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் குடும்பத்தினர் என்ற வகையில், ஆறு லட்சம் பேர் உள்ளனர். போலீசார், தங்கள் பணிக்கு பயன்படுத்த, அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு மட்டும், பகுதிக்கேற்ப மாதம், 20 முதல், 35 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை, அந்தந்த மாவட்ட ஆயுதப்படையில் இயங்கும், 'பங்க்'குகளில் நிரப்பிக் கொள்ளலாம். புறநகர் பகுதியில் உள்ளவர்கள், பங்க்குகளில் எரிபொருள் நிரப்பி, அதற்கான ரசீது வழங்கி, பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

போலீசார், தங்கள் போக்குவரத்து செலவு தொகையை அதிகரித்து வழங்க, அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில், சிலர் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த உயர் நீதிமன்றம், போலீசார், அதிகாரிகளின் வாகனங்களுக்கு, போக்குவரத்து எரிபொருள் செலவை, பகுதிக்கேற்ப, 1,500 முதல், 2,000 ரூபாய் அதிகரித்து வழங்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கூடுதல் தொகையை வழங்க, டி.ஜி.பி., ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், 'போலீசாருக்கு, அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள வாகனங்கள், சொந்த வாகனங்களை பயன்படுத்துவோர் குறித்த பட்டியலை, உடனடியாக வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இதனால், போலீசார் மற்றும், அதிகாரிகளுக்கு மாத சம்பளத்தில், 1,500 முதல், 2,000 ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும் என்பதால், 1.02 லட்சம் போலீசார் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால், 'இவர்களின் ஓட்டுகள், ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும்' என, அ.தி.மு.க.,வினர் நம்பிக்கையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GK ANAND - chennai,இந்தியா
28-மார்-201913:21:31 IST Report Abuse
GK ANAND ஹிந்துக்கள் தவிர மற்றையோர் எல்லாம் மத சார்பற்றவர்கள் எனவே இவர்களின் கூட்டணியின் பெயரை ஹிந்துமத சார்பற்ற கூட்டணி என அழைப்பதே சரியாகும். ஸ்டாலினின் தந்தையார் நீண்டநாள் உயிரோடிருக்கவேண்டும் என்பதற்காக திருமலையின் வேத பண்டிதர்கள் சிலபேர் கோபாலபுரம் வீட்டில் கலைஞர் முன்பாக வேதமந்திரம் ஓதப்பட்டதை வாட்சப் மற்றும் முகநூலில் கண்டு களித்தவர்கள் ஏராளம் வாழ்க ஸ்டாலினினின் ஏமாற்று வேலை வாழ்க அவருடைய மத சார்பின்மை
Rate this:
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
26-மார்-201901:17:18 IST Report Abuse
ராஜேஷ் உங்க சம்பளத்தையும் போனஸையும் எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் வேண்டும் என்றால் ஆசைக்கு இணங்கலாம். மிரட்டி பணம் பறிக்கும் காக்கிகளுக்கு இங்க அறிவிப்பு ஒரு போர்ட் அல்ல
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-மார்-201923:01:32 IST Report Abuse
தமிழ்வேல் எண்ணையை தொடைச்சிகிட்டு உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும். (எண்ணெய், பெட்ரோலானாலும் சரி, விளக்கெண்னையானாலும் சரி)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X