அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கல்லா கட்டும் குட்டிக்கட்சிகள்!
ஓட்டு வங்கியை வளைக்கும் தேசிய கட்சிகள்
பணம், பதவி, சலுகைகளை அள்ளித்தர தயார்

இந்த லோக்சபா தேர்தலில், குட்டிக் கட்சிகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக, இவர்களை கூட்டணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில், தேசியக் கட்சிகள் உள்ளன. அதே நேரத்தில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெரும் லாபம் பார்க்கின்றன, குட்டிக் கட்சிகள்.

 கல்லா கட்டும்,குட்டிக்கட்சிகள்


தேசிய அரசியலில், காங்கிரஸ், ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே, ஆதிக்கம் செலுத்தியது, ஒரு காலம். 1977ல், ஜனதா கட்சி ஆட்சி அமைந்த பிறகு, நிலைமை மாறியது.மாநிலக் கட்சிகள், தேசிய அரசியலில் ஈடுபடத் துவங்கின. கடந்த, 1990களில், கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல், தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலைக்கு, தேசியக் கட்சிகள் வந்து விட்டன.

தற்போது, மாநிலக் கட்சிகளையும் தாண்டி, குட்டிக் கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க வேண்டிய நிலைக்கு, தேசியக் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.நடப்பு, 16வது லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலின்போது, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், 39 கட்சிகள் இருந்தன. இவற்றில், ஒரு சில கட்சிகள் மட்டுமே வென்றன.

வெளியில் இருந்து ஆதரவு அளித்த, அ.தி.மு.க., 37 தொகுதிகளிலும், மஹாராஷ்டிராவின் சிவசேனா கட்சி, 18 இடங்களிலும் வென்றன. இதைத் தவிர, சில கட்சிகள், ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி பெற்றன. ஆனால், தற்போதைய தேர்தலிலும், இவற்றில் பெரும்பாலான கட்சிகளுடன், பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது. அது போலவே, காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், பல மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகள், மீண்டும் இணைந்துள்ளன.

இவ்வாறு கூட்டணி அமைக்கும்போது, பல்வேறு சமரசங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட மாநிலத்தில் அல்லது தொகுதியில், குறிப்பிட்ட ஓட்டுச் சதவீதம் உள்ள கட்சிகளால்,

தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய்விடக் கூடாது என்ற நோக்கத்தில், தேசியக்கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. அதே நேரத்தில், கூட்டணி அமைப்பதன் மூலம், சிறிய கட்சிகளும், பல பலன்களை பெறுகின்றன.

வாரியத் தலைவர்கள் பதவி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பதவி போன்ற, அரசு பதவிகளைப் பெறுகின்றன.மேலும், அந்த கட்சிகளின் தலைவர்கள் மீதான வழக்குகளுக்கு, தற்காலிகமாக, 'தடை' விதிக்கப்படுகிறது. உதாரணமாக, உத்தர பிரதேசத்தின், 80 தொகுதிகளில், கடந்த தேர்தலில், பா.ஜ.,71ல் வென்றது; கூட்டணி கட்சியான அப்னா தளம், இரண்டில் வென்றது. அப்போது, கூட்டணியில் இடம்பெற்றிருந்த, 'சுகல்தேவ் பாரதிய சமாஜ்' கட்சியுடன், தற்போதும், பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர், ஓ.பி.ராஜ்பார், முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில், அமைச்சராக உள்ளார்.

இந்தத் தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, ராஜ்பார் முரண்டு பிடித்தார். அதையடுத்து, ராஜ்பாருடன், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா பேசினார். அதையடுத்து, ராஜ்பாரின் மகன், அரவிந்த், உத்தர பிரதேச சிறு தொழில் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அமைச்சருக்கான அதிகாரங்கள் கொண்டது, அந்தப் பதவி.தவிர, ராஜ்பாரின் கட்சியைச் சேர்ந்த, ஏழெட்டு நிர்வாகிகளுக்கு, வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ராஜ்பார் சமூகத்தினரின் ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக, இந்த நெருக்கடிக்கு, பா.ஜ., பணிந்துள்ளது.

அதுபோல, குர்மி இன மக்களின் ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக, உத்தர பிரதேசத்தில், அப்னா தளம் கட்சியுடன், கூட்டணி அமைத்துள்ளது. மத்திய அமைச்சர் பதவி, அக்கட்சியின், அனுபிரியா படேலுக்கு வழங்கப்பட்டது. இதைத் தவிர, அப்னா தளத்தின், ஒன்பது பேர், மாநில அமைச்சர்களாக உள்ளனர்.தங்களுக்கு சலுகைகள், பலன்கள் கிடைப்பதற்காக, தேசியக் கட்சியின் வெற்றிக்காக, இந்த சின்னக் கட்சிகள் பாடுபடும். இவ்வாறு கூட்டணி அமைப்பது, இரு தரப்புக்குமே வெற்றியாகும்.

எந்தக் கூட்டணியில் யார் கட்சி?


பா.ஜ., தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில், 19 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ஜ., மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 437ல் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள், 106 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், 424 தொகுதிகளில் போட்டி யிடுகிறது.

Advertisement

கூட்டணியில் இடம்பெற்றுள்ள, 25 கட்சிகள், 119 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்:
மஹாராஷ்டிரா - சிவசேனா; தமிழகம் - அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி; பீஹார் - ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி; பஞ்சாப் - சிரோன் மணி அகாலி தளம்; கேரளா - பாரதிய தர்ம ஜன சேனா, கேரளா காங்கிரஸ்; அசாம் - அசோம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி; உத்தர பிரதேசம் - அப்னா தளம்; ஜார்க்கண்ட் - அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்; புதுச்சேரி - என்.ஆர்.காங்கிரஸ்; நாகாலாந்து - தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சி.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்:
மஹாராஷ்டிரா - தேசியவாத காங்கிரஸ், ஸ்வாபிமானி சேத்காரி கங்கட்னா, பகுஜன் விகாஸ் அகாடி, யுவ ஸ்வாபிமானி பக் ஷா.கர்நாடகா - மதச்சார்பற்ற ஜனதா தளம்; உத்தர பிரதேசம் - ஜன அதிகார கட்சி, அப்னா தளம்; ஜார்க்கண்ட் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா; பீஹார் - ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா, விகாஷில் இன்சான் கட்சி.தமிழகம் - தி.மு.க., - ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூ., இந்தியக் கம்யூ., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடுமக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சி; கேரளா - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்., புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி; ஜம்மு - காஷ்மீர் - தேசிய மாநாட்டுக் கட்சி.இதைத் தவிர, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியிலும், பல மாநில மற்றும் சிறிய கட்சிகள் இணைந்துள்ளன. சில மாநிலக் கட்சிகள், தனியாக போட்டியிடுகின்றன.

- கே.எஸ்.நாராயணன்
-நமது சிறப்பு நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-மார்-201923:03:31 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்காவி காங்கிரஸ்ன்னு மொத நாள்லேருந்து சொல்றேன். அவங்க 60 வருசம் எடுத்துக்கிட்டாங்க. அதை 5 வருடத்திலேயே தாண்டிட்டாங்க.

Rate this:
P.K. GANESAN - chennai ,இந்தியா
26-மார்-201912:43:19 IST Report Abuse

P.K. GANESANதம்பி சந்தோசு கோபு படுகுழிக்கு போகப் போவது பாஜகவா நீயா என்பது விரைவில் தெரிந்து விடும். உன் அலட்டல் தங்க முடியவில்லை.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
26-மார்-201912:40:59 IST Report Abuse

இந்தியன் kumarசிறு துரும்பும் பல் குத்த உதவும் இந்த தேர்தல், மோடிஜியின் சேவை மீண்டும் வேண்டுமா என்பதட்கான தேர்தல் மக்கள் தெளிவான முடிவெடுப்பார்கள்.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X