பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மார் 25, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 இதே நாளில் அன்று

மார்ச் 26, 2013 நடிககை சுகுமாரி:

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், 1940-, அக்., 6ம் தேதி பிறந்தார். அத்தையும், நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதியிடம் வளர்ந்ததால், சிறு வயதிலேயே நடனம் மற்றும் நடிப்புத் துறையில் நுழைந்தார். தன், 11-வது வயதில், ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு வேடங்களில் நடித்த இவர், 19-வது வயதில், பிரபலத் தமிழ் இயக்குனர், பீம்சிங்கின் இரண்டாவது மனைவியானார்.அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என, பல மொழிகளில், 2,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில், மலையாளத்தில் பல கதாபாத்திரங்களில் நடித்ததால், 'மலையாள சினிமாவின் மனோரமா' என, அழைக்கப்பட்டார். தமிழில், எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல், இன்றைய நடிகர் தனுஷ் வரை, பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர், இந்திய அரசின், 2003ம் ஆண்டுக்கான, 'பத்மஸ்ரீ' விருதையும், 2010ல், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.தீக்காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுகுமாரி, 2013, மார்ச் 26-ல், சென்னையில் காலமானார். அவர், இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26-மார்-201919:17:46 IST Report Abuse
Loganathan Kuttuva மேடை நாடகங்களில் நடித்தார்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-மார்-201908:56:31 IST Report Abuse
Bhaskaran ஆணவமிக்க மாமியார் பாத்திரத்தில் சி.கே.சரஸ்வதிக்கு அடுத்தபடியாக பிரகாசித்தவர் பட்டிக்காட்டப்பட்டணமா மோகம் முப்பத்துவருசம் சீர்வரிசை போன்றபடங்களில் தன் முத்திரை பதித்தவர் வாராய் என்தோழிவாராயோ பாடலுக்கு நடனம் ஆடி நடித்தவர் நல்ல நடிகை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X