பதிவு செய்த நாள் :
உ.பி.,யை கோட்டை விடுகிறதா பா.ஜ.,

நாட்டிலேயே அதிகமாக, 80 லோக்சபா தொகுதிகள் உள்ள, உத்தர பிரதேச மாநிலத்தை, மேற்கு மற்றும் கிழக்கு உத்தர பிரதேசம் என, இரண்டாக வகைப்படுத்தலாம். மேற்கு, உ.பி.,யில், முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட தேர்தல்கள், முறையே, ஏப்., 11, 18, 23 தேதிகளில் நடக்கின்றன; இங்கு, 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன.

உ.பி.,பா.ஜ.,கோட்டை விடுகிறதா


உ.பி.,யில், நான்காம் கட்டமாக, ஏப்., 29ல் நடக்கும் தேர்தலில், 12 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடக்கிறது. இவற்றில், மூன்று, மேற்கு, உ.பி.,யில் உள்ளன.மேற்கு, உ.பி.,யை, பிராஜ் பூமி, ரோஹில்கண்ட் என, மேலும் இரண்டாக பிரிக்கலாம். இந்த இரு பகுதிகளிலும், விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால், ஹரித் பிரதேஷ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகுதிகள், பசுமைப் புரட்சியால் செழிப்பாக காணப்படுகின்றன.ரோஹில்கண்டில், ஜாட், குர்ஜார் மற்றும் முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். பிராஜ் பூமியில், ஹிந்துக்கள் அதிகம். இங்கு முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், செல்வாக்குடன் திகழ்கின்றன.

பலத்த சேதம்:


கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், நரேந்திர மோடி அலையால், மேற்கு, உ.பி.,யில், மைன்பூரி, பிரோஸாபாத், பதான் தவிர, பிற தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றது. தற்போதைய லோக்சபா தேர்தலில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி - ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகள், கூட்டணி அமைத்து

போட்டியிடுகின்றன. இதனால், ரோஹில்கண்டில், பெரும்பாலான தொகுதிகளை, பா.ஜ., இழக்க நேரிடும் என, கருதப்படுகிறது.

முஸ்லிம்கள், சமாஜ்வாதி கட்சியையும், தலித்துகள், பகுஜன் சமாஜ் கட்சியையும், ஜாட் இனத்தவர், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியையும்ஆதரிப்பது வழக்கம்.இருப்பினும், இந்த பகுதிகளில், ஹிந்துத்துவா கொள்கைகளை, பா.ஜ., திணித்து வருவதால், மத ரீதியில் மோதல்கள் ஏற்படுகின்றன. கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், முஸாபர்நகரில், ஹிந்து ஜாட்களுக்கும், முஸ்லிம் குஜ்ஜார்களுக்கும் இடையே பெரியளவில் கலவரம் வெடித்தது. அந்த சண்டைகளில், 42 முஸ்லிம்களும், 20 ஹிந்துக்களும் உயிரிழந்தனர். 50 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்.

கடந்த ஆண்டு, பசுக்கள் கொல்லப்பட்டதாக கூறி, வன்முறையில் ஈடுபட்ட ஒரு கும்பல், போலீஸ் அதிகாரி, சுபோத் குமாரை கொன்றது; இதைத் தொடர்ந்து, இப்பகுதியில் பெரிய அளவில் கலவரம் வெடித்தது.கடந்த, 2017ல், உ.பி.,யில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த, பா.ஜ., மூத்த தலைவர், யோகி ஆதித்யநாத், பசுக்கள் கொல்லப்படுவதற்கு தடை விதித்தார். மாட்டிறைச்சிக் கூடங்களை மூடும்படி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, எருது, ஆடு, கோழி இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், உ.பி.,யில் இறைச்சி விலை, 30 சதவீதம் அதிகரித்தது.இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால், முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை, விவசாயிகளின் வருவாயையும் வெகுவாக பாதித்தது.கால்நடைகளை கொல்ல தடை உள்ளதால், அவை, சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கின்றன. இவை, விவசாயிகளின் பயிர்களுக்கும், பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.

Advertisement

உ.பி.,யில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி அமைந்து ஓர் ஆண்டில், 1,000 முறை, மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 49 பேர் உயிரிழந்து உள்ளனர்; 370 பேர் காயமடைந்து உள்ளனர்; 3,300 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

தோற்கும் நிலை:


உ.பி.யில், மத ரீதியிலான மோதல்கள், பெரும்பாலும், தேசியத் தலைநகரான டில்லிக்கு அருகில் உள்ள, மீரட், ஷாம்லி, முஸாபர்நகர், பாக்பட், ஷஹாரன்பூர், புலந்ஷர், காஜியாபாத், நொய்டா மாவட்டங்களில் நடந்துள்ளன.யோகி ஆதித்யநாத் முதல்வரான பின், உ.பி.,யில் நடந்த மூன்று லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில், பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது.

யோகியின் சொந்த தொகுதியான, கோரக்பூரில் கூட, பா.ஜ., தோற்க நேரிட்டது. அதேபோல், கவுரவ பிரச்னையாக கருதப்படும், புல்பூர் தொகுதியிலும், பா.ஜ., வேட்பாளர் தோல்வியை தழுவினார்.மத ரீதியிலான கலவரங்களால், கைரானா லோக்சபா தொகுதியில், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் பெண்ணிடம், பா.ஜ., வேட்பாளர் தோற்கும் நிலையும் உருவானது. இத்தகைய சூழ்நிலையில், தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில், மேற்கு, உ.பி.,யில், பா.ஜ., வெல்லுமா என்பதற்கு, காலமே பதில் சொல்லும்.

- கே.எஸ்.நாராயணன் -
நமது சிறப்பு நிருபர்


Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
29-மார்-201916:15:47 IST Report Abuse

ganapati sbஊழல் செய்து ஆண்ட மாயா அகிலேஷ் இணைந்தாலும் நல்லாட்சி நடத்தும் யோகி மோடி இணையால் பாஜக மீண்டும் சிறப்பாய் வெல்லும்

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
28-மார்-201917:23:36 IST Report Abuse

Malick Rajaஉ பி கோட்டையை விட்டுத்தான் ஒருவருடத்திற்கு மேலாகிவிட்டது .. யோக்கி ஆதித்யனான் போட்டி இட்ட தொகுதியே ஊத்திக்கிச்சே .. இதுக்கு மேலயும் உ பி கோட்டையா ..அது மாங்கொட்டையாக பிஜேபிக்கு கொடுத்து ரொம்பநாளாச்சு

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-மார்-201919:31:04 IST Report Abuse

Malick Rajaபூனை கண்ணை மூடிக்கொண்டல் உலகமே இருந்தது போல பிஜேபி நினைப்பில் பிழைப்பு வீணாகுமே தவிர வேறொன்றுமில்லை

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X