அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் வியூகம் வகுக்க
அறிவாலயத்தில், 'வார் ரூம்'

தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின், தேர்தல் பணிகளை திட்டமிடவும், வெற்றிக்கான வியூகம் வகுக்கவும், வேட்பாளர்களுக்கு தேவையான, சட்ட ஆலோசனைகள் வழங்கவும், சென்னை, அறிவாலயத்தில், 'வார் ரூம்' அமைக்கப்பட்டு உள்ளது.

 தேர்தல் வியூகம்,அறிவாலயம்,வார் ரூம்


தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்கள், ஐ.ஜே.கே., - கொ.ம.தே.க., ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு, 25க்கும் மேற்பட்ட உதிரி கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

தி.மு.க., சார்பில், 20 வேட்பாளர்களும், கூட்டணி கட்சிகளின் சார்பில்,

20 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தி.மு.க., கூட்டணிக்கான, தேர்தல் பணிமனையின் தலைமை அலுவலகமாக, அறிவாலயத்தின் முதல் மாடியில்,'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலை ஒட்டி, மாவட்டங்களில் எழும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், பணப் பட்டுவாடா பிரச்னைகள், ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோக செயல்கள் குறித்து, தகவல் தெரிவிப்பதற்கு, வார் ரூமில், தகவல் தொடர்பு சாதன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வார் ரூம் பொறுப்பாளர்களாக, தேர்தல் பணிக்குழு தலைவரும், மூத்த வழக்கறிஞருமான, என்.ஆர்.இளங்கோ, சட்டத்துறை செயலர் கிரிராஜன், தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன், தலைமை நிலைய வழக்கறிஞர் நீலகண்டன், சட்டதிட்டத் திருத்தக் குழு இணை செயலர் சரவணன் உட்பட, 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சம்பந்தமான விபரங்களை, வார் ரூமில் உள்ளவர்களிடம், காலை, 9:00 மணி

Advertisement

முதல் இரவு, 10:00 மணி வரை பெறலாம். தேர்தல் நெருக்கத்தில் விடிய விடிய, வார் ரூம் திறந்திருக்கும். தி.மு.க., மட்டுமல்லாமல், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், ஆலோசனைகள் வழங்கப்படும் என, அறிவாலய தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள, 70 லட்சம் ரூபாய்க்குள், எப்படி தேர்தல் செலவு கணக்குகளை எழுத வேண்டும் என்பது குறித்து, வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூற, 25 வழக்கறிஞர்களும், இந்த வார் ரூமில் இடம்பெற்றுள்ளனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
26-மார்-201916:52:10 IST Report Abuse

Enrum anbudanதேர்தலுக்கு முன் வார் ரூம், அதற்க்கு பின் வாருகின்ற ரூம்?

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
26-மார்-201916:30:25 IST Report Abuse

dandy"வார் ரூம்" ...புல்லரிக்கின்றது ...தமிங்கிலீஷ் ..சும்மா சொல்ல கூடாது தொமில் நன்கு வளர்கின்றது டாஸ்மாக் நாட்டில்

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-மார்-201913:56:14 IST Report Abuse

Natarajan Ramanathanபுகழ்........வியூகம் என்பதும் தமிழ்ச்சொல் இல்லையே

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X