அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., - விஜயகாந்த் மோதல்: பழசை கிளறும் பிரேமலதா :வேட்பாளர்கள் அதிருப்தி

Updated : மார் 25, 2019 | Added : மார் 25, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
ஜெ., - விஜயகாந்த், மோதல்,பழசை, கிளறும், பிரேமலதா

பிரசாரத்தில், பழைய பிரச்னைகளை, தே.மு.தி.க., பொருளாளரும், விஜய காந்தின் மனைவியுமான, பிரேமலதா கிளற துவங்கியுள்ளதால், அக்கட்சி வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க.,வுடன், 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., முதன் முதலில் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சட்டசபையில் எதிர்க்கட்சியாக, தே.மு.தி.க., உருவெடுத்தது.சட்டசபையில், 2012ல், பால், மின்சார கட்டண உயர்வு குறித்து, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னையை எழுப்பினர். யாரால் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது என்றும் பேச்சு எழுந்தது.சட்டசபையில், ஜெயலலிதாவும், விஜயகாந்தும் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஜெயலலிதா, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்ததற்கு வருத்தப்படுகிறேன். இனி, அந்த கட்சியுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது.


latest tamil news



'பெற வேண்டிய ஏற்றங்களை, தே.மு.தி.க.,என்னால் பெற்று விட்டது.இனி, அந்த கட்சிக்கு இறங்குமுகம் தான்' என்றார்.தற்போது நடக்கவுள்ள லோக்சபா மற்றும், 18 சட்ட சபை தொகுதி இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, மீண்டும் கூட்டணி மலர்ந்து உள்ளது.கூட்டணி தொடர்பாக, ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே ஏற்பட்ட மோதல்களை, இரண்டு கட்சியினரும் மறக்க விரும்புகின்றனர். இக்கட்டான நேரத்தில், வெற்றியை மட்டுமே, இரு தரப்பும் எதிர்பார்க்கிறது.

ஆனால், பிரசாரம் என்ற பெயரில், பழைய பிரச்னைகளை, பிரேமலதா கிளறத் துவங்கியுள்ளார். இதனால், தே.மு.தி.க., வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பதை, அ.தி.மு.க.,வின் கீழ்மட்ட நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை.

ஜெயலலிதா கூறியபடி, இந்த ஆட்சி, 100 ஆண்டு கள் தொடர வேண்டும் என, அக்கட்சி தலைவர்கள் கூறியதை ஏற்று, தங்களை சமரசம் செய்து கொண்டனர்.அ.தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பின், பிரேமலதா, கட்சி அலுவலகத்தில் பேட்டி கொடுத்தார். 'விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தவர், ஜெயலலிதா' என்று, குற்றம் சாட்டினார்.இதைத்தொடர்ந்து, விருதுநகரில், கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா, சட்டசபையில், ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து பேசினார்.

தி.மு.க.,வினர் சூழ்ச்சி செய்து, விஜயகாந்தை கோபப்படுத்தி, பேச வைத்து விட்டனர்' என்று, குற்றம் சாட்டினார். அவர் கூறும் காரணங்கள் ஏற்கும்படி இல்லை.பிரசாரம் என்ற பெயரில், பழைய பிரச்னைகளை, பிரேமலதா கிளறுவது, ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களை கோபப்படுத்தி வருகிறது. இதனால், தேர்தலில் வெற்றி பாதிக்கும் என்பதால், தே.மு.தி.க., வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
29-மார்-201906:27:22 IST Report Abuse
Thanu Srinivasan உருவி உருவி தே மு தி க வை இழுத்து வந்து அதிமுக கூட்டணியில் சேர்த்தனர். கடந்த சட்டசபைத் தேர்தலிலும் இதேபோல் ம. ந. கூட்டணியினர் (மன நலம் அற்றோர் கூட்டணியினர்) இவரை உருவி உருவி கூட்டணியில் இவரை முன்நிலை படுத்தி, உருப்படாமல் போயினர். அப்போது அவரால் ப்ரச்சாரம் பண்ண முடிந்தது. அப்படி இருந்தும் படு தோல்வி அடைந்தனர். இப்போது அவரால் பேசவும் முடியவில்லை. ப்ரேம லதாவுக்கே நம்பிக்கை இல்லை. விஜய காந்த்தின் அமெரிக்க மருத்துவத்திற்கே தாங்க முடியாத அளவுக்கு செலவு செய்து விட்டார். ஜெயிப்போம் என்ற நம்பிக்கையும் இல்லை. பிழைக்கிற வழியை பார்ப்போம் என்று, திமுக விடம் பெட்டியை வாங்கி விட்டார். அதனால்தான் இப்படி எல்லாம் பேசுகிறார். எஸ். ட்டி. ஸ்ரீநிவாசன் சென்னை ௭௩
Rate this:
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
26-மார்-201911:06:57 IST Report Abuse
GB.ரிஸ்வான் அன்று முதல்வர் அம்மா அவர்களால் அரசியல் அடையாளம் பெற்று பின்னாளில் அவரையே எதிர்த்து காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு வசைபாடியவர் இன்று தனது கணவரின் குரலை கூட கேட்க முடியாத அளவிற்கு உள்ளார், இன்று கூட்டணியில் இருந்தாலும் உண்மையான அடிமட்ட அதிமுக தொண்டன் இந்த கட்சிக்கு ஒட்டு போடமாட்டான் இது தான் இவர்களின் கட்சி தேர்தல் ... டெபாசிட் வாங்க கூட ரொம்ப தூரம் ..நோட்டாவை வெல்வார்களா என தான் இருக்கு
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
26-மார்-201909:50:34 IST Report Abuse
சுந்தரம் இன்னிக்கு பிரேமலதா சொல்வதை விஜயகாந்த் சொல்வாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X