பொது செய்தி

தமிழ்நாடு

நெல் சாகுபடிஅறுவடைக்கு தயார்

Added : மார் 25, 2019
Advertisement
 நெல் சாகுபடிஅறுவடைக்கு தயார்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்ட நான்கு ஏக்கர் நெல் சாகுபடி, அறுவடைக்கு தயாராகியுள்ளது.கிணத்துக்கடவு பேரூராட்சியை ஒட்டிய, சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருன்ணன்; இளம் விவசாயி. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், இவரது, நான்கு ஏக்கர் வயல் பரப்பில், நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளார்.ஆனைமலையை சேர்ந்த அனுபவமிக்க, தொழிலாளர்கள் வயல் அமைத்து கொடுத்து, நான்கு மாதங்களுக்கு முன், கோ - 45 ரக நெல் நாற்றுகளை நடவு மேற்கொள்ளவும் உதவினர்.
நீர் பாசனம், பயிர் வளர்ச்சிக்கு ஏற்ற உரம் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்து தெளிப்பு ஆகியவற்றின் காரணமாக, நான்கு ஏக்கரில் விளைந்த நெற்பயிர் வளர்ச்சியடைந்துள்ளது.விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''கிணத்துக்கடவு பகுதியில் நீண்ட காலத்துக்கு பின், முதன்முதலாக, நெல்சாகுபடி செய்தது பெருமையாக இருக்கிறது. நீர் பற்றாக்குறை இல்லாத நிலையில், நான்கு ஏக்கரில் சாகுபடியாகும் நெற்பயிரில், கதிர்கள் அதிகளவு தோன்றியுள்ளது. அடுத்த, 10 - 15 நாட்களில் அறுவடை செய்யப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X